4 டிசம்பர், 2008

'மர்மயோகி' கதையென்ன ?


மர்மயோகி, படத்தின் பெயரை போலவே அதன் கதையையும், அதில் இடம்பெறும் பரபரப்பான காட்சிகளையும் மிக மிக மர்மமாக வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.குமுதம் வாசகர்களுக்காக
`மர்மயோகி' கதையென்ன என்பதை அறிய களத்தில் இறங்கினோம். `விருமாண்டி' கதையை நாம் முன்பே முழுமையாகச் சொன்னோம். அந்த அனுபவத்தின் காரணமாக `மர்மயோகி'யின் கதை கொஞ்சம்கூட கசிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் கமல். இதனால் முக்கியமான ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் முழு ஸ்கிரிப்ட் கொடுக்காமல் தவிர்த்திருக்கிறார் கமல்.இதனால் கமல் வட்டாரத்தில் தேடுதலைத் தொடங்கினோம்.
`மர்மயோகி'யின் கதை சமணர்களின் காலத்தில் ஆரம்பமாகிறது. மனிதன் தோன்றிய பிறகு அசைவம் சாப்பிட ஆரம்பிக்கிறான். பின்னாளில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவதும் வழக்கத்திற்கு வந்தது. இதன் அடிப்படையில் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் எதையும் தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக பலம் பெறுகிறார்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களாக போற்றப்படுகிறார்கள்.அசைவம் சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக பழிக்கப்படுகிறார்கள். இந்நிலையைக் கண்டு கொதித்தெழும் கமல் மக்களின் நலனுக்காக தீண்டாமையை எதிர்த்து தன் கருத்தைப் பதிவு செய்கிறார். இதன் தொடர்ச்சியாக அவரது உயிருக்கு உலை வைக்கத் துரத்துகிறது மேல் மட்ட மக்களின் படை. ஒவ்வொரு பொறியிலும் அகப்படாமல் தப்பிக்கும் கமல், அந்த இக்கட்டான சூழ்நிலைகளில் ஐந்து பெண்களைச் சந்திக்கிறார்.நட்பு கொள்கிறார். காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தப்பித்து ஓட முடியாத நிலை ஏற்படும்போது, தன்னை தாக்க வரும் படைமீது எதிர்ப்புக் காட்டி போராடுகிறார் என்று கதை தொடர்கிறது.
இதுதான் மர்மயோகியின் கதை.
நன்றீ குமுதம்