4 டிசம்பர், 2008

'மர்மயோகி' கதையென்ன ?


மர்மயோகி, படத்தின் பெயரை போலவே அதன் கதையையும், அதில் இடம்பெறும் பரபரப்பான காட்சிகளையும் மிக மிக மர்மமாக வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.குமுதம் வாசகர்களுக்காக
`மர்மயோகி' கதையென்ன என்பதை அறிய களத்தில் இறங்கினோம். `விருமாண்டி' கதையை நாம் முன்பே முழுமையாகச் சொன்னோம். அந்த அனுபவத்தின் காரணமாக `மர்மயோகி'யின் கதை கொஞ்சம்கூட கசிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் கமல். இதனால் முக்கியமான ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் முழு ஸ்கிரிப்ட் கொடுக்காமல் தவிர்த்திருக்கிறார் கமல்.இதனால் கமல் வட்டாரத்தில் தேடுதலைத் தொடங்கினோம்.
`மர்மயோகி'யின் கதை சமணர்களின் காலத்தில் ஆரம்பமாகிறது. மனிதன் தோன்றிய பிறகு அசைவம் சாப்பிட ஆரம்பிக்கிறான். பின்னாளில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவதும் வழக்கத்திற்கு வந்தது. இதன் அடிப்படையில் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் எதையும் தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக பலம் பெறுகிறார்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களாக போற்றப்படுகிறார்கள்.அசைவம் சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக பழிக்கப்படுகிறார்கள். இந்நிலையைக் கண்டு கொதித்தெழும் கமல் மக்களின் நலனுக்காக தீண்டாமையை எதிர்த்து தன் கருத்தைப் பதிவு செய்கிறார். இதன் தொடர்ச்சியாக அவரது உயிருக்கு உலை வைக்கத் துரத்துகிறது மேல் மட்ட மக்களின் படை. ஒவ்வொரு பொறியிலும் அகப்படாமல் தப்பிக்கும் கமல், அந்த இக்கட்டான சூழ்நிலைகளில் ஐந்து பெண்களைச் சந்திக்கிறார்.நட்பு கொள்கிறார். காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தப்பித்து ஓட முடியாத நிலை ஏற்படும்போது, தன்னை தாக்க வரும் படைமீது எதிர்ப்புக் காட்டி போராடுகிறார் என்று கதை தொடர்கிறது.
இதுதான் மர்மயோகியின் கதை.
நன்றீ குமுதம்









7 நவம்பர், 2008

ஒரு கனவும் இந்தக் கண்ணீரும்...

-ஏ.கே.கான்
''என் நண்பர்களே.. நான் கனவு காண்கிறேன்.. நம் உடலின் நிறத்தால் இன்று நாம் இத்தனை பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாளையும் இந்த பிரச்சனைகள் இருக்கத் தான் போகின்றன.
ஆனாலும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
நிற பேதங்களையெல்லாம் தாண்டி நாம் அனைவரும் சமம் தான் என்று ஒரு நாள் இந்த தேசம் சொல்லும்...
பல ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் மக்கள் வெள்ளை இனத்தினரோடு இதோ இந்த ஜார்ஜிய மலைப் பகுதியில் ஒன்றாக, சகோதரர்களாக நடமாடுவார்கள்...
ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது.
இதோ, அநீதி உச்சகட்டத்தில் நின்று பேயாட்டம் ஆடும் இந்த மிஸிஸிபி நதிக் கரையோரம் ஒரு நாள் சுதந்திரம்.. நியாயம் என்ற சோலை பூக்கும்.
என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் இந்த நாட்டில் அவர்களது நிறத்தால் எடை போடப்படாமல், அவர்களின் செயல்களால், மனதால் எடைபோடப்படுவார்கள்..
ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது.
கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அதற்காக துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான வீரன் மார்ட்டின் லூதர் கிங்கின் இந்த உரை கருப்பின மக்களை மட்டுமல்ல, வெள்ளையின மக்களின் இதயங்களையும் கண்ணீ்ர் விடச் செய்தது.
அவர் பேசியது 1963ம் ஆண்டில்... லட்சக்கணக்கான கருப்பின மக்களைத் திரட்டி வாஷிங்டன் நோக்கி பேரணியாகச் சென்று அந்த இன மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை உள்ளிட்ட சம உரிமைகளும், வேலைகளும் வேண்டும் என்று கோரி கிங் ஆற்றிய உரை இது.
இது வெள்ளையின மக்களின் இதயங்களைத் துளைத்த உரை, கருப்பின மக்களின் போராட்டத்தில் வெள்ளையர்களையும் பங்கேற்கச் செய்த உரை.
ஆயுதமே இல்லாமல் போரை நடத்தி வெள்ளையர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய மகான் மார்ட்டின் லூதர் கிங்.
கிங்கை இப்படி அகிம்சைப் போராட்டக்காரராக மாற்றியது இந்தியா தான். தனது அகிம்சையால் இந்தியா சுதந்திரம் வாங்கிக் காட்டியதில் ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்ட கிங் 1959ம் ஆண்டில் இந்தியா வந்தார்.
மகாத்மா காந்தி உயிருடன் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தைச் சந்தித்து காந்தி குறித்துப் பேசிவிட்டு இப்படிச் சொன்னார்..
இந்த இந்திய மண்ணில் நின்று சொல்கிறேன்.., ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகிலேயே ஒரு மாபெரும் ஆயுதம் உண்டென்றால் அது அகிம்சை தான். எந்த சக்தியாலும் தப்ப முடியாத புவியீர்ப்பு விசை மாதிரி என்னை காந்தி ஈர்த்திருக்கிறார்.. இதோ அவர் சொன்ன ஆயுதத்தோடு நான் நாடு திரும்புகிறேன்.. என்றார்.
இப்படி மார்ட்டின் லூதர் கிங் ஒரு புறம் மக்களைத் திரட்ட, இன்னொரு புறம் வேறு பல சாதாரண கருப்பின மக்களும் தங்களது சுய மரியாதைக்காக உரிமைக்காக ஆங்காங்கே அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தனர்.
1955ம் ஆண்டில் 15 வயதே ஆன கிளாடெட் கோல்வின் என்ற பள்ளிச் சிறுமி வெள்ளைக்காரருக்கு தனது இருக்கையைத் தர மறுத்தாள்.
அதே ஆண்டில் ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண் மோண்ட்கோமெரி என்ற இடத்தில் பஸ்சில் வெள்ளையினப் பெண்ணுக்கு இடம் தர மறுத்து சிறை போனார்.. இதையடுத்து அந்த ஊரில் பேருந்துகளை புறக்கணிக்குமாறு கருப்பின மக்களுக்கு உத்தரவிட்டார் மார்ட்டின் லூதர் கிங்.
பஸ்களை புறக்கணித்து நடக்க ஆரம்பித்தனர் கருப்பின மக்கள். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. 385 நாட்கள்.. யாரும் பேருந்தில் ஏறவில்லை.. கிங் வீடு மீது குண்டு வீசப்பட்டது, அவர் அசரவில்லை.
இதையடுத்து பஸ்களில் அனைவரும் சமமே, யாரும் அமரலாம், யாரும் யாருக்கும் இடம் தர வேண்டியதில்லை, எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று முதல் வெற்றி கிடைத்தது கருப்பின மக்களுக்கு.
ஆம்.. பேருந்தில் தான் கிடைத்தது முதல் சுதந்திரம்!
அடுத்தடுத்து வந்தன இன வேறுபாடு தடை சட்டம், கருப்பினருக்கு அரசுத் துறைகளில் வேலை தரும் சட்டம், அடிப்படை மனித உரிமைகள் தரும் சட்டம், கருப்பின மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரும் சட்டம்...கடைசியாக 1965ல் வந்தது கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கும் சட்டம்.
இந்த சட்டங்கள் அடிமைத்தனத்தை அதிகாரப்பூர்வமாக ஒழித்தாலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கருப்பின மக்களுக்கு முழு அதிகாரமும் கிடைத்ததா என்றால் இல்லை.இதனால் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகளும் மூண்டன.
கருப்பின மக்களால் செனட், காங்கிரஸ் என நுழைய முடிந்ததே தவிர அமைச்சர்கள் அந்தஸ்துக்கோ ஆட்சியில் முக்கிய பதவிகளைப் பிடிக்கவோ அவர்கள் எளிதில் அனுமதிக்கப்படவில்லை.அவர்களது தலைக்கு மேல் ஒரு கண்ணுக்குத் தெரியாத Glass ceiling மிக உறுதியாகவே கட்டப்பட்டிருந்தது.இந்தத் தடையை உடைக்கும் ஒரு சக்திக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது அமெரிக்கா.மார்ட்டின் லூதர் கிங்குக்குப் பி்ன் அந்த இடத்தை நிரப்பக் கூடிய மாபெரும் போராளி கருப்பர் இனத்தில் இருந்து வரவில்லை.
லூதர் கிங்கால் அடையாளம் காணப்பட்ட ஜெஸ்ஸி ஜேக்சனால் கூட இந்த உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முழுமையாக எடுத்துச் செல்ல முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனாலும் அவர் தனது பங்குக்கு போராடித்தான் பார்த்தார். இதனால் அவரை ஜனநாயகக் கட்சி 1984லும் 1988லும் அதிபர் வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு அமெரிக்காவில் நிலைமை மாறியதும் உண்மை.இவருக்கு முன் சிரிலி சிஸ்ஹோல்ம் என்ற கருப்பருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.
ஆனால், இருவராலுமே லூதர் கி்ங் மாதிரி வெள்ளையின மக்களின் மனசாட்சியையும் கருப்பர் இன மனசாட்சியையும் ஒரு சேர தொட முடியவில்லை. இதனால் கருப்பர் இன அதிபர் என்பது ஒரு பகல் கனவாகவே தொடர்ந்தது.
இந்த நிலையில் தான் சிகாகோவில் ஒரு நட்சத்திரம் தோன்றியது...
தொடரும்...




5 நவம்பர், 2008

கருப்பர் இன மக்கள் கண்ணீருடன் கொண்டாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்த அதிபராகிறார் பராக் ஒபாமா.
அமெரிக்கத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா முன்னிலையி்ல் உள்ளார்.ஒபாமா 19 மாகாணங்களிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் 15 மாகாணங்களிலும் முன்னிலையில் உள்ளனர். இதன்மூலம் செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவுள்ளது.இந்த வெற்றிகள் மூலம் மொத்தமுள்ள 538 புள்ளிகளில் (Electoral College) ஒபாமா 333 புள்ளிகளையும் மெக்கெய்ன் 145 புள்ளிகளையும் வென்றுள்ளனர்.அதிபராக 270 புள்ளிகள் தான் தேவை என்ற நிலையில் ஒபாமா மாபெரும் வெற்றியை நோக்கி போய்க் கொண்டுள்ளார்.நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் பராக் ஒபாமா 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் நாட்டின் 44வது அதிபராகிறார்.மேலும் அமெரிக்க அதிபராகும் முதல் கருப்பர் இனத் தலைவர் என்ற பெருமையையும் ஒபாமா பெறுகிறார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தினருக்கு ஓட்டுரிமையே 1964ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மோசமான கொள்கைகளே குடியரசு வேட்பாளர் மெக்கெய்னின் படுதோல்விக்கு காரணமாகக் கருதப்படுகிறது.தனது சொந்த ஊரான சிகாகோவில் வாக்களித்த ஒபாமா தனது வெற்றியையும் அங்கேயே கொண்டாடினார். அவரது பேச்சைக் கேட்க காகோவின் கிராண்ட் பார்க் பகுதியில் சுமார் 10 லட்சம் மக்கள் திரண்டு பல மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்களிடையே ஒபாமா உரையாற்றினார்.அதே போல அமெரிக்கா முழுவதுமே ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட ஆங்காங்கே மக்கள் கூடியுள்ளனர்.பல இடங்களில் கருப்பர் இன மக்கள் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியி்ல் கண்ணீர் வடித்தபடி நின்றுள்ளனர்.1960களுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் தான் மிக அதிகபட்சமான வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

1 நவம்பர், 2008

Chandrayaan sends first photos of earth’s surface

Chandrayaan-firstpic 1

Chandrayaan-firstpic


25 அக்டோபர், 2008

இயற்கை வடித்த கண்ணீரை தம்
தேகங்களில் தாங்கிய தமிழ்நாட்டு உறவுகள்-





























































































23 அக்டோபர், 2008

பதிவு செய்தவர்: இனியவன் ஹாஜி முஹம்மது பதிவு செய்தது: 23 Oct 2008 01:44 am http://thatstamil.oneindia.in
வேலுப்பிள்ளையின் பிள்ளைக்குசெல்லப் பிள்ளைகளே!
கன்னி நிலம் மீட்க,
நம் காணி நிலம் காக்கவன்னிக்
காட்டில் கன்னி வெடிகளாய்வாழும்
நம் கண்மணிகளோடுகரம்
கோர்க்க எம் உயிரின் உயிரானஉறவுகளை
காக்க..எம் உயிர் போகட்டும்
துரோகிகளின் தோட்டாக்களுக்கு...

அடே இராச பக்சே!சிரிமா
பண்டார நாயகா முதல்ஜெய வர்த்தனா -
சந்திரிகா வரைஒரு மயிரும் புடுங்க முடியவில்லை!!

மரணத்துக்கு அஞ்சாதமாவீரர்கள் நாங்கள்..
அதிகார வெறி பிடித்தலையும்உன்
மாமன்களையும்ராமன்களையும்
வீழ்த்தும்இலங்கேஸ்வரன் இராவணனின்இளவள்கள் நாங்கள்..
தமிழ் ஈழம் மலரும் நாள்வரைஎம்
வருங்காலம்
வாழ்வதற்காகநிகழ்காலத்தை இழக்கவும்
இறக்கவும்தமிழின சொந்தங்கள் தயார்தான்..
சிங்கள சகோதரர்களே...
சமாதானத்திற்க்குநீங்களும் தயாரா???????

22 அக்டோபர், 2008

தேசியம் பேசுகிற தங்கபாலுவைக் கேட்கிறேன்... இயக்குநர் பாரதிராஜா

தமிழகத்தில் இருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு பாரதிராஜா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

"இராமேஸ்வரம் போராட்டம் எப்படி இருந்தது?"

"இதுவரை நடிகர்கள் கலந்துகொண்ட நெய்வேலி போராட்டமாகட்டும், ஒகேனக்கல் போராட்டமாக இருக்கட்டும், காவேரிக்கான போராட்டமாக இருக்கட்டும்... அந்தப் பிரச்சினைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தையே புரிந்துகொள்ளாமல், தமிழ் மக்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறோமே என்ற உணர்வில் வெறும் ஷோ காட்டும் நிகழ்ச்சியாகத்தான் இதுவரை நடிகர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், இது உணர்வு ரீதியான போராட்டம். எந்த நடிகரையும், நடிகையையும் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் யாரும் இராமேஸ்வரத்துக்கு வரவில்லை. இன உணர்வால் மக்கள் திரண்டார்கள். எனவே, இது மற்ற போராட்டங்கள் போல அல்ல. ஆக இது அரிதாரம் பூசாத, முழுக்க முழுக்க ஓர் இனப்போராட்டமாகவே நடந்தது."

"நடிகர் சங்கம் தனியாக உண்ணாவிரதம் இருந்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறதே..?"

"ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... இராமேஸ்வரத்தில் உணர்வு ரீதியாக நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால், நம்முடைய சுயரூபம் தமிழக மக்களிடையே அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சம் நடிகர்களை ஆட்டிப்படைக்கிறது. அதேநேரம், 'வசதியாக' போராட்டம் நடத்த வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் வேறு வழியில்லாமல் தனியாக சென்னையில் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். நெய்வேலியில் போராட்டம் நடந்தபோதே எங்களுக்கு வசதி இல்லையென்று குறைபட்டுக் கொண்டவர்கள் இவர்கள். அங்கே ஈழ மண்ணில் அடக்கம் செய்யக்கூட ஆளில்லாமல், தமிழன் தினம்தினம் அநாதைப் பிணமாக குவிந்து கிடக்கிறான். அவனுக்காகப் போராட்டம் நடத்த இவர்களுக்கு கேரவன் வேன் வேண்டுமா? சொகுசுகள் வேண்டுமா? நடந்த போராட்டம் ஒரு விழா அல்ல... இழவு... துக்கம் விசாரிக்கும் ஒரு நிகழ்வு. துக்கச் செய்தியைக் கேள்விப்பட்டு நாமாகத்தான் செல்லவேண்டும். 'எனக்கு அங்கே வர வசதிக் குறைவா இருக்கு. அதனால் பிணத்தை என் வீட்டு வாசலுக்குக் கொண்டுவா. நான் அஞ்சலி செலுத்துகிறேன்' என சொல்வதுபோல இருக்கிறது இது.
மேலும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் செயல்! இத்தனை தூரம் சொகுசு, வசதி பற்றியெல்லாம் பேசும் நடிகர்-நடிகைகள், பணம் என்றவுடன் ஒரு பாட்டுக்காக ராஜஸ்தான் சென்று பாலைவனத்தில் குத்தாட்டம் போடுகிறார்கள். அங்கே என்ன வசதி செய்து கொடுக்கிறார்கள்? ஆக... பணம், சொகுசு, வசதி வாய்ப்புகளுக்கு முன்னால் உணர்வை சாகக்கொடுத்தவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? குறிப்பாக, உணர்வில்லாத தமிழ் நடிகைகளை நினைத்தால், ஆத்திரத்தில் மனசு ரொம்பவே வலிக்கிறது..."

"போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ரஜினி, கமல் உங்களிடம் பேசினார்களா?"

"எதுவும் பேசவில்லை. ஒருத்தரை 'உலகநாயகன்' என்கிறார்கள்! இன்னொருத்தரை 'சூப்பர் ஸ்டார்' என்கிறார்கள்! எம்.ஜி.ஆர்-சிவாஜிக்குப் பிறகு இவர்கள்தான் இருபெரும் திலகங்களாக சித்திரிக்கப்படுகிறார்கள். இவர்களின் சினிமா மார்க்கெட் உலக அளவில் உயர்ந்து, சம்பளம் கோடிக்கணக்கில் கொட்டுவதற்குக் காரணம், பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள்தான். இந்த உண்மையை அவர்கள் மறந்துவிட்டார்கள். போராட்டத்துக்கு வருவது வராதது இருக்கட்டும். உன்னை இந்த அளவுக்கு உச்சத்தில் உயரவைத்து அழகு பார்க்கும் தமிழனின் தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழனுக்கு ஆதரவாக உன்னால் ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ரிக்சா கொடுத்து, தையல் மெசின் கொடுத்து போட்டோ போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் உனக்கு, தமிழனின் உணர்வு புரியவில்லையா? ஆயிரக்கணக்கில் மன்றம் வைத்து நடத்தும் உனக்கு, அவர்கள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கிளர்ச்சி நடத்த முடியாதா?"

"சென்னையில் இளைஞரணி மாநாட்டை முடித்துவிட்டு மறுநாள் விஜயகாந்த் இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொள்வார் என செய்திகள் அடிபட்டதே..."

"வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லையே... விஜயகாந்த் பிறப்பால் தமிழன் அல்ல. வளர்ப்புத் தமிழன். உனக்கு உண்மையிலேயே தமிழ் உணர்வு இருந்தால், மாநாட்டை முடித்துவிட்டு மறுநாள் விமானமேறி இராமேஸ்வரம் வந்திருப்பாய். அங்கு வந்து, 'நான் அரசியல்வாதியாக வரவில்லை, கட்சித் தலைவனாக வரவில்லை. தமிழன் என்ற முறையில் வந்திருக்கிறேன்' என நீ சொல்லியிருப்பாயானால், உன்னை மேடையேற்றிப் பேசவைத்து, கைதட்டி அழகு பார்த்திருப்பேன். ஆனால், நீயோ வளர்ப்புத் தமிழன் கூட இல்லை என்பதை நிரூபித்துவிட்டாய்.
நீ முதலமைச்சர் நாற்காலிக்குக் கனவு காணாதே... அந்த இடம் தமிழனுக்குத்தான். நீ கிங்மேக்கராக வேண்டுமானால் இரு. ஆனால், கிங் ஆக வேண்டுமென நினைக்காதே. உன் கட்சியில் இருக்கும் பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழன்தான். நான் ஒப்புக்கொள்கிறேன். அவரை முதல்வராக்குவதாகச் சொல்... அதைவிட்டுவிட்டு நீ கனவு காணாதே..!"

"ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலையைக் கொச்சைப்படுத்தி இராமேஸ்வரத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?"

"அவர்கள் பேசியதில் என்ன தவறு?
தேசியம் பேசுகிற தங்கபாலுவைக் கேட்கிறேன்...
மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக
கோட்சே இனத்தை அழித்தீர்களா?
முன்னாள் பிரதமர் இந்திரா
காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர்
என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா?
சீக்கியனும் உணர்ச்சிவசப்பட்டான்.
தமிழனும் உணர்ச்சிவசப்பட்டான்.
சீக்கியனை மட்டும் மன்னிச்சுடுவ...
தமிழனைத் தண்டிச்சுக்கிட்டே இருப்பியா?"
என்றார் பாரதிராஜா.

விண்ணை நோக்கிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்





நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த சந்திராயன்-1 ஆளில்லா விண்கலம் இன்று அதிகாலை திட்டமிட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-11 என்ற துருவ செயற்கைக்கோள் செலுத்த வாகனத்தின் மூலம் சந்திராயன்-1 விண்கலம் இன்று அதிகாலை சரியாக 06.22 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

தீ ஜுவாலைகளை வெளியேற சந்திராயனை சுமந்து கொண்டு விண்ணை நோக்கிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் திட்டமிட்டபடி 4 கட்டங்களாகப் பிரிந்தது. இதில் 4வது மற்றும் இறுதிக் கட்டத்தில் ராக்கெட் பிரிந்ததும் சந்திராயன்-1 விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்ட 1,100 வினாடிகளில் சந்திராயன்-1 திட்டமிட்ட புவிப் பாதையை அடைந்தது. இது உறுதி செய்யப்பட்டவுடன் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதன் பின்னர் பேசிய மாதவன் நாயர், இன்றைய தினம் இந்திய விண்வெளி வரலாற்றில் மிகச் சிறப்புமிக்க தினம் என்றும், இன்று துவங்கிய இப்பயணம் விண்வெளி பயணத்தில் மிக முக்கியமான முயற்சி என்றார்.

கடந்த 4 நாட்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டாலும், சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ பாடுபட்ட அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூரு அருகே உள்ள பைலாலு கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டு அதன் புவிவட்டப் பாதையில் நிறுத்தப்படும். இதற்கு 15 நாட்கள் பிடிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய 6வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

21 அக்டோபர், 2008

பதிவு செய்தவர்: suji பதிவு செய்தது: 20 Oct 2008 11:25 பம்

http://thatstamil.oneindia.

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உணர்ச்சிக் கவிதை!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்களைச் கொஞ்சம்

உலகம் தேடும்

முத்தமிழ் சிவப்பாகும்

போர் மேகங்கள் சூழும்

உங்களுக்கும் வலிகள் புரியும்

இயந்திரப் பறவைகள் எதிரியாகும்

ஆமிக்காரன் இயமன் ஆவான்

உயிர் வெளியேறிய

உடல்களை காகம் கொத்தும்

விழிகளிலே குருதி கசியும்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்

பலமுறை தீப்பிடிக்கும்

பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?

ஒரணியில் திரண்டு

ஒரே முடிவு எடுப்பீர்களா?

உங்கள் அரசியல் விளையாட்டில்

எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!

எந்த இனத்தவனும் உங்களை

மன்னிக்கமாட்டான்

சொந்த இனத்தவனைக்

நீங்கள் காத்திட மறந்துவிட்டால்

வாயிலே நுழைவதெல்லாம்

உங்கள் வயிற்றிலே செரிக்காது

சொந்த சகோதரன்

அங்கே பட்டினியில் சாகும்போது

இந்த தாகம் இந்தச் சோகம்

இந்த இன அழிப்பு

இந்த பேர் இழப்பு

எல்லாம் தமிழனுக்கே

வாய்த்த தலைவிதியா?

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி

நீ குளிப்பாய்

பெற்ற பிள்ளையை

படுக்கையில் நீ இழப்பாய்

நித்திரையில் நிம்மதியே இருக்காது

மரநிழலில் மனம் குமுறும்

நரம்புகள் வெடிக்கும்

நா வறண்டு போகும்

பெண்களின் ஆடைகள் தூக்கி

பேய்கள் வெறி தீர்க்கும்

ரத்த ஆறு வழிந்தோடும்

நடுவிலே நாய் நக்கும்

தலையில் செல்வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே

பதுங்கு குழிகளில் வாழ

உங்களால் முடியுமா?

அகோரத்தின் உச்சத்தை

உணர்ந்தது உண்டா?

அழுது களைத்து மீண்டும்

எழுந்து நின்றது உண்டா?

உன்னைப் புதைக்கும் இடத்தில்

உயிர் வாழப் பழகியதுண்டா?

உலகம் எங்கும் சிதறி

தாயைப் பிரிந்து வாழும்

துயரத்தை அனுபவிக்க முடியுமா?

பனிக் குளிரில் பனியோடு

பனியாய்க் கரைந்து

உங்களால் உறைய முடியுமா?

சவப் பெட்டிக்குள் உறங்கி

நாடு விட்டு நாடு போய்

நரகத்தில் தொலையமுடியுமா?

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!


பொறுத்தது போதும்...


-அனாமிகா பிரித்திமா
தினமும்...
கவிதைகளை...
பிரசவிக்கிறேன்...
வேதனையோடு...
உங்கள் நினைவாய்…

குழந்தையை ...
பொத்தி பொத்தி ...
வைத்தேன்...
வளர்த்தேன்…

என் இதயத்தில்...
இன்று வரை…

பொறுத்தது போதும் ...
தவழ விடுகிறேன்…
எல்லாவற்றையும் …

அதையேனும் எடுத்து...
வளர்த்து விடுங்கள்...

நான்...
அணைந்து போகும் ...
முன்பு...
என் நினைவாய்…
-அனாமிகா பிரித்திமா

19 அக்டோபர், 2008

"இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?"
கலைஞர்

ஈழத் தமிழர்கள் படும் துன்ப துயரங்களை வெளிக்கொணரும் இறுவட்டு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக உலாவி வருகின்றது.

இது தொடர்பில் தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த கட்டுரை:

இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி.

வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. 'சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13 ஆம் நாள் முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்த நாள் (14 ஆம் நாள்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்து கட்சிக்கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.

முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

"இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?" என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்து கட்சிக்கூட்டத்தில், 'இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'

கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்.

வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் 'கிபீர்' போர் விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள்.

இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, 'தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் 'ஓ' வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.

அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு 'ஐயோ' என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். 'இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். "இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே" என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.

மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். 'என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் 'ஒரு பொருளாக' பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.

வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணி அணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டு நிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் 'கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.

இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.
"கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்" என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.


இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். "ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்" என்கிறார்கள் அந்த மக்கள்.

வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் 'ஓ' வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.

காட்சிகள் இருளாகி மறைகின்றன. 'உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது.

"எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக்கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. "இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்" என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே" என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.
கடைசியாக முடியும்போது, 'எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..


தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ?.

இவ்வாறு குமுதம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



18 அக்டோபர், 2008

இனப் படுகொலை: உறங்க முடியாமல் தவிக்கிறேன்-கருனாநிதி
சென்னை: இலங்கையில் தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருப்பதை எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன். இந்த இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு சில ஏடுகள் மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.அதைப்பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, தமிழக கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக கருதவில்லை. அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வேதனை தெரிவித்திருப்பதாகத் தான் கருதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் சூழ்நிலை எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாகக் கவலைப்படுகிறோம்.
அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்ப கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களையெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது நமக்கு!
ஆனால் ஜெயலலிதாவிற்கு இதைப்பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க நேரமில்லை. 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நானும் பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி, அப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீரவில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்சினைக்காக ஜெயலலிதா கால வரம்பற்ற உண்ணாவிரதம் என்று தொடங்கினாரே; பிறகு அதனைத் திரும்பப் பெற்றாரே, காவேரி பிரச்சினை தீர்ந்த பிறகா உண்ணா விரதத்தை நிறுத்தினார். இல்லையே. அந்தப் பிரச்சினை இன்னமும் முடிந்தபாடில்லையே?.
இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது ஓராண்டு ஈராண்டுகளாக அல்ல.1939ம் ஆண்டே பண்டித ஜவகர்லால் நேரு இண்டியன் இன் சவுத் ஏசியா என்ற நூலில்- இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி, அப்போது நடை பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறார்.
அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-
இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.இவ்வாறு பண்டித நேரு 1939ம் ஆண்டிலேயே வெளி நாட்டில் வாழும் தமிழர்களுக்காக இந்தியாவின் பாதுகாப்புக் கரம் நீளுகின்ற நாள் ஒன்று வரும் என்று அறிவித்தாரே, அந்த நாள் இந்த நாளாக இருக்க வேண்டுமென்று தான் மத்திய அரசை நோக்கி நாம் குரல் கொடுக்கின்றோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக திமுக எதுவும் செய்ய வில்லை என்றதொரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. திமுக பொறுப்பிலே இருந்தபோது 1976ம் ஆண்டிலும், 1991ம் ஆண்டிலும் இரண்டு முறை மத்திய அரசினால் ஆட்சியிலிருந்து கலைக்கப்பட்டது. அந்த இரண்டு முறையும் திமுக மீது பழி சுமத்தப்பட்டது என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திமுக நடந்து கொண்டது என்பது தான் முக்கியமான குற்றச்சாட்டு! தலையாய பழியுமாகும்!.
1976ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கலைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி உரையாற்றியபோது, திமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலே இருக்கின்ற அரசுக்கு விரோதமாக நடைபெற்று வருகின்றது. அது இந்தியாவின் வெளி நாட்டுக் கொள்கைக்கு ஏற்றதல்ல. கழக ஆட்சியை கலைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று அவரே கூறியிருக்கிறார். எனவே வேறு எதுவும் அதற்கு சான்று தேவையில்லை என்று கருதுகிறேன்.
1976ம் ஆண்டு ஆட்சிக் கலைப்புக்குப்பிறகு திமுக 12 ஆண்டு காலம் பதவிப் பொறுப்புக்கு வரவில்லை. அந்த இடைக்காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடவில்லை.
1981ம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழகச் சட்டமன்றப் பேரவையிலே ஒரு தீர்மானம் அதிமுக ஆட்சியினரால் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் என்ன செய்தேன்?.
தீர்மானம் அதிமுகவால் கொண்டு வரப்படுகிறது என்பதற்காக புறக்கணித்தேனா? அவையிலிருந்து வெளி நடப்பு செய்தேனா? தீர்மானத்தை எதிர்த்தேனா? இடைவிடாது இழிதகை அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேனா?, அம்மையாரைப்போல.. கிடையாது.
அதிமுக கொண்டு வந்த தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்காக என்பதால், அந்தத் தீர்மானத்தை வழி மொழிந்து உரையாற்றினேன்.
நாம் எந்த அளவிற்கு அன்று பெருந்தன்மையோடு தமிழ் உணர்வோடு நடந்து கொண்டோம், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா எந்த அளவிற்கு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையிலே உள்ள தமிழ் மக்கள் "கடலுக்கு அப்பால் கரையுண்டு என்றிருந்தோம்; கரையே கரையே கடலானால் எங்கே போய்க் கால் வைப்போம்?'' என்று இலங்கைத் தமிழ்க் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தன் பாடிய கவிதையைப் பாடிக் கொண்டு, பல ஆண்டுக் காலமாக உகுத்திடும் கண்ணீர்த் துளிகளுக்கு நாம் தரப் போகும் பதில் என்ன?'
ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம்' என்று பாவேந்தர் தமிழ் இனம் குறித்துப்பாடியது வெறும் சொற்குப்பை தானா?'
வெங்கொடுமைச் சாக் காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்' என்றாரே, அந்தத் தோள்கள் எங்கே?நமது தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன்.
இனம் காப்போம்!
இனமானம் காப்போம்!
இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்!
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

15 அக்டோபர், 2008

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 2
பேச்சுவார்த்தைகள் தோற்கக் காரணமென்ன?
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவதாக சிறிலங்க அதிபர் ராஜபக்சே தன்னிச்சையாக அறிவித்தபோது, அதனை எதிர்த்த நாடுகள் அனைத்தும், “இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காண்பது சாத்தியமில்லை, பேச்சுவார்த்தையின் மூலம்தான் நீடித்த தீர்வு காண முடியும்” என்று கூறின. இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கூட இதைத்தான் தொடர்ந்து கூறிவருகின்றன. “தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துவிட்டால் இலங்கை இனப் பிரச்சனைக்கு மிகச் சுலபமாக தீர்வு கண்டுவிடலாம்” என்று போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொள்ளும் அந்த அறிவிப்பை வெளியிட்ட பொதுக்கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே பேசியுள்ளார்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்க அரசிடம் இருந்த, இப்போதும் இருந்துவரும் ஒரே திட்டம் ‘இராணுவத் தீர்வு’தான் என்பதை அதன் கால் நூற்றாண்டு நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கும், ஆழ்ந்து கவனித்தவர்களுக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். இதனை வெளிப்படையாக பேசியதற்காக ராஜபக்சேவிற்கு நன்றி கூட தெரிவிக்கலாம். ஏனென்றால், இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதில்லை என்பதில் சிங்கள மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்துவரும் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. தமிழர்களை அடக்குவதிலும், ஒடுக்குவதிலும் அக்கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து எப்போதும் இருந்ததில்லை. சிறிலங்க சுதந்திரா கட்சியாகட்டும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் அல்லது இக்கட்சிகள் ஆட்சியில் அமர ஆதரவளிக்கும் ஜனதா விமுக்தி பெரமுணா, புத்தத் துறவுகளின் கட்சியான ஜாதிக ஹேல உருமையா என்ற கட்சியாகட்டும், இவையனைத்துமே தமிழர்களுக்கு ஆளும் உரிமை ஏன், நிர்வாக உரிமை அளிப்பதையே எதிர்த்துதான் வருகின்றன. இன்றளவும் இதில் மாற்றமில்லை. எனவே அந்த சிங்கள பேரிணவாத கண்ணோட்டத்தையே அதிபர் ராஜபக்சே பிரதிபலித்தார்.

ஒரு நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் ஒரு சமூக, அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமெனில், அப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அமைப்பு முறையும், அது சார்ந்த சிந்தனைப் போக்கும் மாறியிருக்க வேண்டும். ‘போதும் பிரச்சனை, அமைதிக்கு வழிவகுப்போம்’ என்கின்ற உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும். அப்பொழுதான் தீர்வு குறித்தான பேச்சும், அதன் மீதான விவாதமும் ஒரு முடிவிற்கு கொண்டு செல்லும். இலங்கையைப் பொறுத்தவரை இது இன்றளவும் ஏற்படவில்லை.

தமிழர்களுக்கு எதிரான எண்ண ஓட்டங்களில் அங்கு எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதனால்தான் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்துவதற்குக் கூட பெரும்பான்மையாகவுள்ள சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கின்றன. ஆனால் இனப் பிரச்சனைக்கு இதனை ஒரு அடிப்படையாக இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கருதுகின்றன (இதனை ஏற்பதற்கில்லை என்று தமிழர்கள் என்றோ புறக்கணித்துவிட்டனர் என்பது வேறு விடயம்). ஆனால், அந்த இணைப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எனவே இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களிடமும், அவர்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள கட்சிகளிடமும் சரி, சிறுபான்மை இனத்தவராக உள்ள தமிழர்களுக்கு உரிமை அளிப்பது தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தைகளில் எள்ளவும் முன்னேற்றம் காண முடியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்: “இலங்கை (சிறிலங்கா) என்பது சிங்கள தேசமே. இது பெரும்பான்மையாக உள்ள சிங்களர்களுக்கு உரிய நாடுதான். இந்த நாடு பற்பல நூற்றாண்டுகளாக சிங்கள அரசர்களால்தான் ஆளப்பட்டு வந்துள்ளது. சீனா சீனர்களாலும், இங்கிலாந்து ஆங்கிலேயர்களாலும், ஜெர்மனி ஜெர்மானியர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. இந்த நாடுகளில் எப்படியோ அதேபோல்தான் இலங்கையிலும் பெரும்பான்மை சிங்களவர்களால் ஆளப்பட்டு வருகிறது”. இதுதான் சிங்கள சமூக, அரசியல் சிந்தனை.

இந்த சிந்தனை மாற்றமின்றி நீடிப்பதால்தான் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு அங்குலம் கூட முன்னே செல்லவில்லை. தங்களுடைய ஆளுமையின் கீழ்தான் தமிழர்கள் வா‌ழ்ந்தாக வேண்டும் என்ற கனவுலகில் சிங்கள அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் உறுதியாக நினைக்கையில், பேச்சுவார்த்தையை எந்த அடிப்படையில் நடத்துவது?
கால் நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில் பல ஆயிரக்கணக்கான சிறிலங்கப் படையினர் உயி‌ரிழந்துள்ளனர். ஒவ்வொருத் தாக்குதலிலும் பலியாகும் சிறிலங்க படையினரின் கணக்கை உடனடியாக தருவதைத்தவிர்த்தாலும், கடந்த ஒரு மாத காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் எத்தனை சிறிலங்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், எவ்வளவு பேர் காயமுற்றனர் என்கின்ற கணக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தவறாமல் கூறிவருகிறது சிறிலங்க அரசு.

நேற்றுக் கூட ஒரு கணக்கை கொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத்த்தில் மட்டும் 200 சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 1,000 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டு அமைச்சர் விவரமளித்துள்ளார். அதனை நாமும் செய்தியாக கொடுத்துள்ளோம் (பார்க்க செய்தி). தற்பொழுது போர் உக்கிரமாக நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை உண்மையை பிரதிபலிக்காது என்றாலும், ஒரு மாதத்திற்கு 200 வீரர்கள் பலியானதும், 1,000 வீரர்கள் காயமுற்றதும் அந்நாட்டு இராணுவத்தைப் பொறுத்தவரை பெரிய இழப்புதான். இது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வீரர்கள் எல்லாம் சிங்களவர்கள்தானே? இவர்களை எதற்காக இழக்கிறோம் என்று சிங்களவர்களும் சிந்தித்திருப்பார்களே? என்று எண்ணினால் அதன் தாக்கம் சற்றும் அதன் சமூக, அரசியல் அரங்கில் பிரதிபலிக்கவில்லை. இத்தனை வீரர்களை எதற்கு இழக்கிறோம் என்ற சிந்தனை பிறந்திருந்தால் நிச்சயம் அது சிங்களவர் மத்தியில் ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்புணர்வை தோற்றுவித்திருக்கும். அப்படி நடந்திருந்தால் அரசியல் ரீதியான ஒரு நியாயமான தீர்வை நோக்கி சிறிலங்க அரசு செல்லவேண்டும் என்கின்ற நிர்பந்தம் உருவாகியிருக்கும்.
அதுவும் ஏற்படவில்லை. எனவே சமூக, அரசியல் களங்களில் தீர்வுக்குச் சாதகமான ஒரு மாற்றமும் ஏற்படாத நிலையில், அங்கு தமிழர்களுக்கு எதிரான குருட்டுத்தனமான இராணுவ நடவடிக்கையை அதிபர் ராஜபக்சே முடுக்கிவிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு தீர்வு என்பது முற்றிலும் சாத்தியமற்றது என்றே தெரிகிறது. பிறகு இலங்கை இனப் பிரச்சனைக்கு எதுதான் தீர்வு? அந்தத் தீர்வு இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்துமா?
இலங்கைக்குள்ளிருந்து தீர்வு காண்பதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விட்ட நிலையில், வெளியில் இருந்துதான் தீர்வு காணப்பட வேண்டும். அந்தத் தீர்வைப் பற்றி ஆராய முற்படும் முன்னர் கொசோவோவை நோக்கி பார்வையைத் திருப்புவோம்.
நாளை பார்ப்போம்...
நன்றி; வெப்துனியா


11 அக்டோபர், 2008

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 1


இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு திட்டமிட்டு நடத்திவரும் தொடர் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, இராணுவ நடவடிக்கையை நிறுத்‌திவிட்டு, அமைதி பேச்சுவார்த்தையைத் துவக்குமாறு சிறிலங்க அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலால் தங்கள் நாட்டிலேயே வீடிழந்து அகதியாய் பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பரிதவிப்பில் உள்ள நிலையில், தி.மு.க.வின் நிலையை விளக்கி பேசிய முதல்வர் கருணாநிதி, மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு இணங்காமல் தனது இனப் படுகொலை நடவடிக்கையை சிறிலங்க அரசு தொடருமானால், ஈழத் தமிழர்களைக் காக்க தங்களுக்கு (தமிழர்களுக்கு) மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுமட்டுமின்றி, மற்றொரு முக்கிய கருத்தையும் சென்னை மயிலையில் நடந்த அக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு, “முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீரவேண்டுமா? இது விவாதத்திற்குரிய விடயம்” என்று கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை!
இன்று நேற்றல்ல, 1983ஆம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டுக் காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை (சிறிலங்க விடுதலை கட்சி ஆட்சியாக இருந்தாலும், இன்று எதிர்க் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாக இருந்தாலும்) சிறிலங்க அரசுகள் நடத்தி வருகின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இன அழிப்பிற்கு இரையாகியுள்ளனர்.

பல லடசக்கணக்கான தமிழர்கள் வீடின்றி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒன்றேகால் லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். அங்குள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கை கால் நூற்றாண்டுக் காலமாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலில் அந்நாட்டு இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையே சரியானது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்
என்று கோருவது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே.
FILEஈழத் தமிழர்கள் பிரச்சனையை நன்கு அறிந்தவர் அனைவருக்கும் நன்கு தெரியும், இதுநாள்வரை நடத்தப்பட்ட எந்தப் பேச்சுவார்த்தையும் எந்தப் பலனையும் பெற்றுத்தரவில்லை என்பது. 1980 வரை பல்வேறு அரசுகளுடன் அன்று தமிழ் மக்களின் ஏகோபித்தப் பிரதிநிதிகளாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன‌ணி நடத்திய பேச்சிலும் சரி, அதன்பிறகு இலங்கையில் அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டம் துவங்கியதற்குப் பிறகும் சரி, நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்தியாவின் வற்புறுத்தலால் திம்புவில் பேச்சுவார்த்தை நடந்தது. எந்தப் பயனும் ஏற்படவில்லை. அது இலங்கையில் மோதல் மேலும் பலமடையவே வழிவகுத்தது.1983ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறிலங்க இராணுவத்தின் இன ஒடுக்கல் நடவடிக்கை உச்சக் கட்டத்தை எட்டியதையடுத்து, பல்லாயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் அகதிகளாய் தமிழகத்திற்கு வந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இன ஒடுக்கல் அதிகரித்த அதே வேளையில் போராளிகளின் பலமும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம், அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அதுவரை தடையற்று நடந்த இராணுவ தாக்குதலுக்கு பதிலடி விழத் தொடங்கியதும், தனது தாக்குதலை கண்மூடித்தனமாக தீவிரப்படுத்தியது சிறிலங்க இராணுவம். யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள வடமராட்சி, தென்மராட்சி ஆகிய பகுதிகளின் மீது கார்பெட் பாம்பிங் (Carpet Bombing) என்று இராணுவ மொழியில் கூறப்படும் குண்டு மழைத் தாக்குதலை நடத்தியது சிறிலங்க இராணுவம். இதனைத் தொடர்ந்து ஈழத்திலேயே அந்நாட்டு மக்கள் அகதிகளாயினர்.
பிரச்சனையை மனித நேயக் கண்ணோட்டத்தோடு அணுகிய இராஜீவ் காந்தி அரசு, யாழ்ப்பாண மக்களுக்கு போர் விமானங்களின் வாயிலாக உணவுப் பொருட்களை அளித்து சிறிலங்க அரசிற்கு நெருக்கடியைத் தந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்திய - சிறிலங்க (இராஜீ்வ் காந்தி - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம், இலங்கையில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு நிர்வாக அமைப்பாக ஏற்படுத்த வழிவகுத்தது. ஆனால் தமிழர்களின் ஒப்புதலைப் பெறாத அந்த ஒப்பந்தம் சிறிலங்க அரசினால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது மட்டுமின்றி, வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு சிறிலங்க அரசமைப்பிற்கு
எதிரானது என்று கூறி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கிவிட்டது.
6 ஆண்டுக் காலம் தமிழர்களின் காவல் அரணாக நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடந்தது. 2002ஆம் ஆண்டு, ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டினால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 2002இல் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நார்வே நாட்டின் அணுசரனையுடன் சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. தாய்லாந்தில் இருந்து டோக்கியோ பிறகு ஜெனிவா என்று பல இடங்களில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட எதையும் சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று புலிகள் குற்றம்சாற்றினர். யாழ்ப்பாணத்திலும், மற்ற இடங்கிளிலும் பொதுக் கட்டடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டும் அதனை சிறிலங்க அரசு நிறைவேற்றவில்லை என்று புலிகள் கூறினர். போர் நிறுத்தத்தை மீறுவதாக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாற்றினர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே, இலங்கை அதிபராக இராஜபக்சே பதவியேற்றப் பிறகு, இருதரப்பினருக்கும் இடையே போர் வெடித்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக 2007ஆம் ஆண்டு அதிபர் இராஜபக்சே அறிவித்தப் பிறகு முழு அளவிலான ஒரு போரை விடுதலைப் புலிகள் மீது இராணுவம் கட்டவிழ்த்துவிட, அதில் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். அது தீவிரமடைந்துவிட்ட நிலையில்தான் இன்று ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக, வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக பரிதவித்து வருகின்றனர்.எனவே, இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு மேலும் தீர்வு காணும் சாத்தியமில்லை என்பது இந்த வரலாற்றையும், அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஏற்பட்டுவரும் நிகழ்வுகளை கண்டவர்களும் ஒப்புக்கொள்வார்கள். பிறகு இலங்கை இனப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? ஒரு நீடித்த தீ்ர்வு எந்த வகையில் சாத்தியம்?
ஈழத்திற்கு வெளியில் இருந்துகொண்டு அவர்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்டக்கூடியதாக அந்தத் தீர்வு இருப்பதே அந்த மக்களுக்கு உலக சமூகம் செய்யக்கூடிய சரியான நியாயமாக இருக்கக்கூடும்.அதனை நாளை பார்ப்போம்.
நன்றி ; வெப்துனியா


ஓவியங்கள்






9 அக்டோபர், 2008

7 அக்டோபர், 2008

திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..?


'கட்டிப்பிடி' வைத்தியம்!

- தொகுப்பு : எஸ்.சரவணன்


திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.


ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.


எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது.


அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையாவன:

* நாளொன்றுக்கு

4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.

அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ

அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.


* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில்

கணவன் - மனைவி ஒன்றாக

பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதில், வெளியே சென்று இரண்டு முறை

டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம்.


* மாதத்துக்கு இரு முறை

காதலுணர்வுடன்

கணவனும், மனைவியும்

மாலை வேளையில் ஒரு சிறிய

வாக்கிங் போக வேண்டும்.


* குழந்தைகள்,

உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு,

கணவனும் மனைவியும் தனியாக,

மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ

அல்லது சினிமா தியேட்டருக்கோ

செல்ல வேண்டும்.


* மாதத்துக்கு ஒருமுறையேனும்,

கணவன் தனது மனைவிக்கு

பூச்செண்டு போன்ற ஏதேனும்

ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும்.


இவற்றை எப்போதும் கடைப்பிடித்து,

அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்...

திருமண வாழ்க்கை இனிதாக தொடரும்

என்கின்றனர்,

ஆய்வாளர்கள்.

2 அக்டோபர், 2008

கா‌ந்‌தி ‌பிற‌ந்தநா‌ள்






வெறுப்புணர்வை துறப்போம்: மகாத்மா காந்தி!



த‌மிழா‌க்க‌ம் : கா. அ‌ய்யநாத‌ன்



(வெள்ளையனே வெளியேறு போராட்டத் தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் நடப்பதற்கு முன்னர் மகாத்மா காந்தி ஆற்றிய உரை இது)



இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன், நான் முன்வைக்கும் இரண்டு முக்கிய விடயங்களை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த நோக்கத்துடன் அதனை நான் முன்மொழிகின்றேனோ அதே நோக்கில் நீங்களும் அதனை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படி நான் கூறுவதற்குக் காரணம், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதனை எவ்வாறு நிறைவேற்றிட வேண்டும் என்று நான் விரும்புகின்றேனோ, அதன்படியே நீங்களும் செயல்படவேண்டும்.



இது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும். 1920ஆம் ஆண்டில் இருந்தது போலவே இப்பொழுதும் நான் இருக்கின்றேனா அல்லது என்னுள் மாற்றம் ஏதும் ஏறபட்டுள்ளதா என்று பலரும் என்னைக் கேட்கின்றனர். அப்படி நீங்கள் கேட்பதும் சரியே.


1920இல் இருந்ததுபோலவே, அதே காந்தியாகவே நான் இப்போதும் இருக்கின்றேன் என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன். அடிப்படையி்ல் நான் எப்படியிருந்தேனோ அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்பொழுது எந்த அளவிற்கு நான் அகிம்சைக்கு முக்கியத்துவம் அளித்தேனோ அதே அளவிற்கு இப்பொழுதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றேன். அகிம்சையின் மீதான எனது உறுதிப்பாடு ஓரளவிற்கு அதிகரித்திருக்கலாம். நான் அது தொடர்பாக அப்பொழுது எழுதியதற்கும், பேசியதற்கும் இப்போது அளிக்கும் இந்த தீர்மானத்திற்கும் எந்த முரண்பாடும் இல்லை.


இப்படிபட்ட அசாதாரண சூழ்நிலை ஒவ்வொருவரின் வாழ்விலும் எப்போதாவதுதான் உருவாகிறது. இந்த கணத்தில் நான் சொல்லுகின்ற, செய்துக்கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றிலும் நான் தூய்மையான அகிம்சையையே கடைபிடிக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்திலும், அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய போராட்டமும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டவைதான். எனவே உங்களில் யாராவது அகிம்சையில் நம்பிக்கை இழந்திருந்தால் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதீர்கள்.


எனது நிலையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அகிம்சை எனும் விலை மதிக்கமுடியாத கொடையை இறைவன் எனக்கு அளித்துள்ளார். நானும், எனது அகிம்சையும் இப்போது சோதனைக்குள்ளாகியுள்ளோம். ஹிம்சையால் எரிந்துக்கொண்டிருக்கும் இந்தப் பூமி, தன்னை விடுவிக்குமாறு இறைஞ்சும் இந்த வேளையில் கூட நான் அகிம்சையை பயன்படுத்தவில்லையெனில் இறைவன் என்னை மன்னிக்கமாட்டார் என்பதோடு, எனக்கு அந்தக் கொடை தவறுதலாக அளிக்கப்பட்டதாகவே ஆகிவிடும். ரஷ்யாவும், சீனாவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள இந்த நிலையில் நான் தயங்கிக்கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, நான் செயல்பட்டாக வேண்டும்.


அதிகாரத்தைக் கைப்பற்ற அல்ல, இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்க வன்முறையற்ற வழியில் போராடுகிறோம். வன்முறைப் போராட்டத்தில் வெற்றிபெரும் தளபதி, இராணுவ புரட்சியின் மூலம் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகிறான். ஆனால், காங்கிரஸின் போராட்டமென்பது சாத்வீக வழியென்பதால் அங்கு சர்வாதிகாரத்திற்கு கொஞ்சமும் இடமில்லை. சாத்வீக வழியில் போராடும் வீரன் தனக்காக எதையும் பெறுவதில்லை, தனது நாட்டிற்கும், நாட்டின் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறான். இந்த நாடு விடுதலைப் பெற்றதற்குப் பிறகு யார் ஆளப்போகிறார்கள் எனபது காங்கிரஸின் கவலையல்ல. ஆட்சி அதிகாரம், அது எப்போது வந்தாலும், அது மக்களுக்கே உரியது. அதனை யாரிடம் அளிப்பது என்பதை மக்களே முடிவு செய்வார்கள். அது, நான் விரும்புவதுபோல, ஒரு பார்சியிடம் அளிக்கப்படலாம் அல்லது இன்றைக்கு நம்மில் எவரும் கேள்விப்படாத ஒரு பெயரைக் கொண்டவருக்கு போய் சேரலாம். அப்படிப்பட்ட நிலையில், “இந்த சமூகம் மிகச் சிறியது. அந்தக் கட்சி சுதந்திரப் போராட்டத்தில் எந்த வித்த்திலும் பங்குபெறவில்லை, அதனிடம் எதற்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும்” என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. அதன் துவக்க காலத்திலிருந்தே எந்தவிதமான சமூக (சாதி, மத) வண்ணத்தையும் ஏற்காமல் மிகச் சாதுரியமாக காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது. தேச அடிப்படையிலேயே அதன் சிந்தனையும், செயல்பாடும் இருந்து வருகிறது.


நாம் கடைபிடித்துவரும் அகிம்சை குறையுடையது என்பதும், அதன் முழுமையான நோக்கிலிருந்து நாம் எவ்வளவு தூரத்திலிருக்கின்றோம் என்பதும் எனக்கு தெரியும் என்றாலும், அகிம்சையைப் பொறுத்தவரை இறுதி வெற்றி என்பதோ தோல்வி என்பதோ இல்லை. குறைபாடுகள் இருந்தாலும், பெரிதாக ஏதாவது நடக்குமானால் அது நாம் கடந்த 22 ஆண்டுகளாக அமைதியாகவும், விடாப்பிடியாகவும் கடைபிடித்துவரும் ஒழுக்கத்திற்காக அதனை இறைவன் நமக்கு வழங்கியதாகவே இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.


நமது நாட்டின் விடுதலைக்காக நாம் மேற்கொண்டுவரும் ஜனநாயக போராட்டத்தைப் போல வேறெந்த நாட்டிலும் நடைபெற்றதாக நான் உலக வரலாற்றில் கண்டதில்லை. சிறையில் இருந்தபோது பிரெஞ்ச் புரட்சியைப் பற்றி கார்லைல் எழுதிய புத்தகத்தைப் படித்தேன். ரஷ்யப் புரட்சியைப் பற்றி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்னிடம் விளக்கினார். என்னைப் பொறுத்தவரை, ஆயுதங்களைக்கொண்டு நடத்தப்படும் போராட்டம் ஜனநாயக லட்சியத்தை நிறைவேற்றுவதில் தோலவியுறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் விரும்பும் அந்த ஜனநாயகம் என்பது, வன்முறை தவிர்த்து சாத்வீக வழியில் நிலைநிறுத்தப்படும் ஜனநாயகமே அனைவருக்கும் சரிசமமான சுதந்திரத்தை பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் அவரவருக்கு எஜமானன்தான். அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கே நான் உங்களை அழைக்கின்றேன். இதனை நீங்கள் அடையும்போது இந்து, முஸ்லீம் என்ற வேறுபாடுகளை மறந்துவிடுவீர்கள், இந்தியர்களே நாம் என்ற எண்ணத்துடன் அனைவரும் இணைந்து விடுதலைக்காக போராடுவீர்கள்.


அடுத்தபடியாக வெள்ளையர்கள் மீதான நமது மனப்பான்மை குறித்த கேள்வி எழுகிறது. நமது மக்களிடையே வெள்ளையர்களின் மீது ஒரு வெறுப்புணர்ச்சி உள்ளதை நான் கவனித்துள்ளேன். அவர்களின் நடத்தையால் தாங்கள் வெறுப்படைந்திருப்பதாகக் கூறுகின்றனர். வெள்ளைய (பிரிட்டிஷ்) ஏகாதிபத்தியத்தையும், வெள்ளையர்களையும் அவர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். அவர்களிடமுள்ள இந்த வெறுப்புணர்ச்சி ஜப்பானியர்களை வரவேற்பதற்குக்கூட காரணமாகிவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஒரு அடிமைத்தனத்திற்குப் பதிலாக மற்றொரு அடிமைத்தனத்திற்கு ஆளாக்கிவிடும். இந்த வெறுப்புணர்ச்சியை நாம் துறந்திட வேண்டும். வெள்ளைய ஏகாதிபத்தியத்தியத்தோடுதான் போராடுகிறோம், வெள்ளையர்களோடு நமக்கு எந்தத் தகராறும் இல்லை. இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெள்ளையர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்ற நமது கோரிக்கை அவர்கள் மீதான சினத்தின் பார்பட்டதல்ல. இன்று நிலவும் சிக்கலான சூழ்நிலையில் இந்தியா அதன் பங்களிப்பை செவ்வனே செய்யவேண்டும். ஐக்கிய நாடுகள் நடத்திவரும் இந்தப் போரில் இந்தியாவைப் போன்றதொரு மாபெரும் நாட்டிடமிருந்து வஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவும் பணத்தையும், பொருளையும் பெற்றுக்கொள்வது மகிழத்தக்க நிலையல்ல. சுதந்திரமற்ற நிலையில் எமது மக்களிடமிருந்து உண்மையான தியாக உணர்வையும், வீரத்தையும் தட்டி எழுப்ப முடியாது. நாம் முழு அளவிற்கு தியாகம் செய்யும் நிலையில் நமக்கு கிடைக்கப்போகும் விடுதலையை வெள்ளைய அரசால் தடுத்துவிட முடியாது. எனவே நம்மிடமுள்ள வெறுப்புணர்ச்சியை முழுமையாகத் துறந்திட வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒருபோதும் வெறுப்புணர்ச்சியை உணர்ந்ததில்லை. உண்மையைக் கூறுவதெனில், நான் முன் எப்போதையும் விட இப்பொழுதுதான் வெள்ளையர்களின் மிகச் சிறந்த நண்பனாக உள்ளேன். அதற்கு அவர்கள் இன்றுள்ள துயரமான நிலையும் ஒரு காரணம். என்னிடமுள்ள அந்த நட்புணர்வு அவர்களின் தவறுகளில் இருந்து அவர்களை மீட்கச் சொல்கிறது. இப்பொழுது நிலவும் சூழலில், அதள பாதாளத்தின் விளிம்பில் அவர்கள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். எனவே, அந்த ஆபத்து குறித்து அவர்களை எச்சரிப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இதற்காக அவர்கள் என் மீது ஆத்திரப்படலாம், அவர்களுக்கு உதவ நான் நீட்டும் நட்புக் கரத்தை துண்டித்துவிடவேண்டும் என்று கூடக் கருதலாம். என்னைப் பார்த்து மக்கள் நகைக்கலாம், ஆயினும் இதுவே எனது நிலை.அடுத்தபடியாக வெள்ளையர்கள் மீதான நமது மனப்பான்மை குறித்த கேள்வி எழுகிறது. நமது மக்களிடையே வெள்ளையர்களின் மீது ஒரு வெறுப்புணர்ச்சி உள்ளதை நான் கவனித்துள்ளேன். அவர்களின் நடத்தையால் தாங்கள் வெறுப்படைந்திருப்பதாகக் கூறுகின்றனர். வெள்ளைய (பிரிட்டிஷ்) ஏகாதிபத்தியத்தையும், வெள்ளையர்களையும் அவர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். அவர்களிடமுள்ள இந்த வெறுப்புணர்ச்சி ஜப்பானியர்களை வரவேற்பதற்குக்கூட காரணமாகிவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஒரு அடிமைத்தனத்திற்குப் பதிலாக மற்றொரு அடிமைத்தனத்திற்கு ஆளாக்கிவிடும். இந்த வெறுப்புணர்ச்சியை நாம் துறந்திட வேண்டும். வெள்ளைய ஏகாதிபத்தியத்தியத்தோடுதான் போராடுகிறோம், வெள்ளையர்களோடு நமக்கு எந்தத் தகராறும் இல்லை. இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெள்ளையர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்ற நமது கோரிக்கை அவர்கள் மீதான சினத்தின் பார்பட்டதல்ல. இன்று நிலவும் சிக்கலான சூழ்நிலையில் இந்தியா அதன் பங்களிப்பை செவ்வனே செய்யவேண்டும். ஐக்கிய நாடுகள் நடத்திவரும் இந்தப் போரில் இந்தியாவைப் போன்றதொரு மாபெரும் நாட்டிடமிருந்து வஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவும் பணத்தையும், பொருளையும் பெற்றுக்கொள்வது மகிழத்தக்க நிலையல்ல. சுதந்திரமற்ற நிலையில் எமது மக்களிடமிருந்து உண்மையான தியாக உணர்வையும், வீரத்தையும் தட்டி எழுப்ப முடியாது. நாம் முழு அளவிற்கு தியாகம் செய்யும் நிலையில் நமக்கு கிடைக்கப்போகும் விடுதலையை வெள்ளைய அரசால் தடுத்துவிட முடியாது. எனவே நம்மிடமுள்ள வெறுப்புணர்ச்சியை முழுமையாகத் துறந்திட வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒருபோதும் வெறுப்புணர்ச்சியை உணர்ந்ததில்லை. உண்மையைக் கூறுவதெனில், நான் முன் எப்போதையும் விட இப்பொழுதுதான் வெள்ளையர்களின் மிகச் சிறந்த நண்பனாக உள்ளேன். அதற்கு அவர்கள் இன்றுள்ள துயரமான நிலையும் ஒரு காரணம். என்னிடமுள்ள அந்த நட்புணர்வு அவர்களின் தவறுகளில் இருந்து அவர்களை மீட்கச் சொல்கிறது. இப்பொழுது நிலவும் சூழலில், அதள பாதாளத்தின் விளிம்பில் அவர்கள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். எனவே, அந்த ஆபத்து குறித்து அவர்களை எச்சரிப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இதற்காக அவர்கள் என் மீது ஆத்திரப்படலாம், அவர்களுக்கு உதவ நான் நீட்டும் நட்புக் கரத்தை துண்டித்துவிடவேண்டும் என்று கூடக் கருதலாம். என்னைப் பார்த்து மக்கள் நகைக்கலாம், ஆயினும் இதுவே எனது நிலை.







காதலின் சப்தம்
காதலின் சப்தத்தை
எழுதச்சொன்னாய்அதிகாலை என் ஜன்னலோரம்மெல்லிறகை அசைத்துப்பறந்தபுறாவின் சப்தமாகவோ
மெந்தூரலில் நுழைந்தாடும்காற்றின் சப்தமாகவோ
பெருங்கூட்டத்தில்சிதைந்தாடும் வார்த்தைக்குவியலின்கலவைச் சத்தமாகவோ
தீரா வெயிலின் நடைகளைப்பில்முதிர்கிழவியின் நிழல்கண்டஆசுவாச அனுபவிப்பின்சப்தமாகவோ
மலர்கூட்டம் புகுந்தாடும்சில்வண்டுகளின் சப்தமாகவோ
இதுவெதுமில்லாசிறுகுழந்தையின்முதல் அழுகை,முதல் முத்தச்சப்தமாகவே பட்டதெனக்கு....
-ரிஷி சேது (rishi_sethu23@rediffmail.com)

30 செப்டம்பர், 2008

29 செப்டம்பர், 2008

என் பாக்கியம்...

-அனாமிகா பிரித்திமா
கண்கள் முன் உங்களை...
வைத்திருக்கிறேன்...
ஒரு நொடி கூட முட மனதில்லை...
நீங்கள் மறையக்கூடாதே !...
நாசியில் இழுக்கிறேன் சுவாசம்...
நீங்கள் இருக்கும்...
இதயத்திற்கு...
இரத்த ஓட்டம் வேண்டுமே !...
செயற்கை புன்னகையை ...
ஒட்டி கொண்டு சிரிக்கிறேன்...
தங்கள் சிந்தனையால் சிரிக்க...
உதடுகள் மறுக்கிறதே !...
விரல்கள் உணவை எடுக்க மறக்கிறது !
வாய் அதை ஏற்க மறுக்கிறது !
என் நாவு ருசி இழந்து...
வருடங்கள் ஆனது !
உயிர் (நிங்கள்) இல்லா உடம்பு...
இருந்து என்ன பயன்?...
உங்கள் மடியில் உயிர் பிரியும்...
பாக்கியம் இல்லை...
உங்கள் கையிலாவது...
அது போகட்டுமே ...
அனு அனுவாய் சாவதை விட...
என்னை முழுதாய்...
கொன்றுவிடுங்களேன்...
அது என்...
பாக்கியமாக இருக்கட்டுமே...
என் பாக்கியம் ...
பாக்கியம் ...
-அனாமிகா பிரித்திமா (anamikapritima@yahoo.com)

26 செப்டம்பர், 2008

தேந்திரன்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?

பெற்றோருக்கு தெரியாமல் மோட்டர் சைக்கிளை எடுத்துச் சென்ற மாணவன் விபத்தில் சிக்கினான். மூளை செயலிழந்ததால் உயிரை காப்பாற்ற முடியாத நிலை. துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவனது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர் பெற்றோர். மின்னல் வேகத்தில் அந்த மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார் சென்னை போலீஸ் டிரைவர். காத்திருந்த டாக்டர்கள் குழு அபார வேகத்தில் செயல்பட்டு, அந்த இதயத்தை ஒரு நோயாளிக்கு பொருத்தி அவருக்கு மறுவாழ்வு அளித்தது. - திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவங்கள், பயங்கரவாதிகளின் குண்டுகள் எத்தனை உயிர்களை பறித்தாலும் மனிதாபிமானத்துக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த சம்பவம் பற்றிய கீழே...


திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில் வசிப்பவர் டாக்டர் அசோகன் (44). இவரது மனைவி டாக்டர் புஷ்பாஞ்சலி(40). திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் 'மனீஸ் கிளினிக்' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் தேந்திரன் (16). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான்.


கடந்த சனிக்கிழமை தேந்திரன் தன் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் நண்பன் மோகனை பார்க்க சென்றான். பார்த்து பேசிவிட்டு, வழியில் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். திருக்குமரன் நகரில் ஒரு மீன்பாடி வண்டி கட்டுமான பொருட்களுடன் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதை ஓவர்டேக் செய்து வலதுபுறம் வீடு இருந்த திசையில் திரும்ப தேந்திரன் முயன்றபோது, மீன்பாடி வண்டியில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி இடித்துவிட்டது. வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டியது. உடனே மயங்கி விட்டான்.


அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்கு தேந்திரனை நன்றாக தெரியும். உடனே அவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அவனது அப்பாவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். தேந்திரனுக்கு நினைவு திரும்பவில்லை. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், தலையில் அடிபட்ட அதிர்ச்சியில் தேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டதாகவும், என்னதான் சிகிச்சை அளித்தாலும் மூளை மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினர். தேந்திரனின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள் என்பதால் விஷயத்தை புரிந்துகொண்டனர்.


இனி உயிர் பிழைக்க முடியாத தங்கள் மகனின் உடல், மற்றவர்களுக்காவது உயிர் கொடுக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புவதாக அப்போலோ டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

நேற்று காலை தேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத் துவமனைக்கு அனுப்பப்பட்டன. சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் ஹார்ட் பவுண்டேசனில் சிகிச்சை பெறும் ஒரு சிறுவனுக்கு பொருத்துவதற்காக தேந்திரனின் இதயத்தை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


ஆபரேஷன் முடிந்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள் இதயம் இன்னொருவருக்கு பொருத்தப்பட வேண்டும். ஆனால், 20 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். சென்னை நகர டிராபிக் நெரிசலில் இது சாத்தியமே இல்லை. எனவே போலீஸ் உதவ முடியுமா என்று விசாரித்தனர். அடிஷனல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உடனே உதவ முன்வந்தார். ஆம்புலன்ஸ் ரெடி பண்ணுமாறும், அதை நெரிசலில் சிக்காமல் அழைத்துச் செல்ல ஹ¨ண்டாய் போலீஸ் காரை ஒரு ஏ.சி.யுடன் அனுப்பி வைப்பதாகவும் சுனில் கூறியுள்ளார். வழி நெடுக உள்ள அனைத்து சிக்னல்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.


ஆபரேஷன் முடிந்ததும் டாக்டர்கள் தேந்திரனின் இதயத்தை சிறிய ஐஸ் பெட்டியில் எடுத்துக் கொண்டு 2.50 மணிக்கு வெளியில் வந்தனர். அங்கே நின்றிருந்த அவனது தந்தை ஐஸ் பெட்டியை பார்த்ததும் துக்கம் தாங்காமல் துணியால் வாயை மூடிக் கொண்டார். ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றிருந்தது. அதை கவனிக்காத டாக்டர், அதற்கு முன் நின்றிருந்த போலீஸ் காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்து, ‘வேகமா போங்க..!’ என்று சொல்ல, உள்ளே இருந்த உதவி கமிஷனர் மனோகரன் உடனே சுதாரித்துக் கொண்டு, டிரைவர் மோகனுக்கு ஜாடை காட்ட, உடனே கார் மின்னல் வேகத்தில் பறந்தது.


ஜெ.ஜெ.நகர் செரியன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ரெடியாக இருந்தது. ஒன்பது வயது சிறுவன் மாற்று இதயம் பொருத்துவதற்காக ஆபரேஷன் தியேட்டரில் காத்திருந்தான். போலீஸ் கார் வந்ததும், அப்போலோ டாக்டர் ஐஸ் பெட்டியுடன் உள்ளே ஓடிவந்தார். 6 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. தேந்திரனின் இதயத்தை டாக்டர்கள் குழு வெற்றிகரமாக 9 வயது சிறுவனுக்கு பொருத்தியது.‘தேந்திரன்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? - ‘இதயத்தை கொள்ளை கொள்பவன்’

‘10 நிமிடத்தில் பறந்தேன்’

அந்த பரபரப்பான நிமிடங்கள் பற்றி கார் டிரைவரும் போலீஸ்காரருமான மோகன்
நானும் உதவி கமிஷனர் மனோகரனும் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிச் செல்ல தயாராக இருந்தோம். எதிர்பாராமல் டாக்டர்கள் எங்கள் காரில் ஏறிவிட்டனர். ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் ஏசி ஆட்சேபிக்கவில்லை. ஒருவருக்கு உயிர் கொடுக்க போகிறோம் என்ற பதற்றம் அந்த நிமிடத்தில் தாக்கியது. காரை வேகமாக ஓட்டினேன். கிட்டத்தட்ட 120 கி.மீ வேகத்தில் கார் பறந்தது.

அண்ணாசாலை, வி.என்.சாலை, பர்கிட் ரோட்டில் ஒரு வழிப்பாதையாக இருந்தாலும், போலீசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாலும் எதிர் திசை வழியாக, மேட்லிரோடு, தி.நகர் பஸ் நிலையம், புதிய மேம்பாலம், லயோலா கல்லூரி, அண்ணா வளைவு, அண்ணாநகர் ரவுண்டானா வழியாக ஆஸ்பிடலை அடைந்த பிறகுதான் வாட்சை பார்த்தேன். 10 நிமிடம்தான் ஆகியிருந்தது. டாக்டர் நன்றி சொல்லிக் கொண்டே மருத்துமனைக்குள் ஓடினார். அதன் பிறகுதான் எனக்கு நிம்மதி.


இதுவரை இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டியதே கிடையாது. அருகில் இருந்த உதவி கமிஷனர் மைக் மூலம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே வந்ததால், ரோடு கிளியராக இருந்தது. இது என்னால் மறக்கவே முடியாத நாள்’’

படம்:
படம் 1: விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த மாணவன் தேந்திரன்.
படம் 2: மகனை பறிகொடுத்த டாக்டர் தம்பதி.
படம் 3: ஐஸ் பெட்டியில் இதயத்தை வைத்து அவசரமாக எடுத்துச் செல்கின்றனர்.
படம் 4: ஆம்புலன்ஸ் நிற்பதை கவனிக்காமல், போலீஸ் காரில் இதயத்துடன் புறப்படுகின்றனர்.
( நன்றி: தினகரன் )
"ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த தியாகத்துக்கு ஈடு இணையே கிடையாது" - அமைச்சர் ஸ்டாலின்

25 செப்டம்பர், 2008

சுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..


இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி
இடம் : 'மெர்டேக்கா' சதுக்கம்
திகதி : 27 செப்தெம்பர் 2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு மணி 7.00
பி.கு: அனைவரும்,மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃபின் சிறியக் கொடியையும் உடன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இண்ட்ராஃப் மக்கள் சக்தி மீண்டும் ஒரு பேரணிக்கு தயாராகி விட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கமுந்திங் தடுப்புக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் பலவகையில் வேண்டுகோள் விடுத்திருந்தும், அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராய் பயனற்றுப் போனது.
அதே சமயம், சுயலாபத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலை குறித்து அண்மையில் பல தரப்பினர் பேசிக் கொண்டு வருவதையும், அரசாங்கம் அவர்களுக்கு செவிசாய்ப்பதுபோல் பாசாங்கு காட்டுவதையும் கண்டு நாம் ஏமார்ந்துவிடக் கூடாது. அவர்கள் நினைத்தால் ஆதரிப்பார்கள், அவசியம் இல்லாத பட்சத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள்.
'மக்கள் சக்தி' என்று வரும்பொழுது மக்கள்தான் களத்தில் இறங்கி தங்களின் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். எனவே, நாம் அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும்!
எதிர்வரும் 27 செப்தெம்பர் மாதம் மறவாமல் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அனைவரும் மெர்டேக்கா சதுக்கத்தில் அமைதியான முறையில் ஒன்று கூடுவோம். இண்ட்ராஃப் தலைவர்கள், ராசா பெத்ரா மற்றும் பிற இசா கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவோம், வாரீர்...
இப்பேரணியில் கலந்துக் கொள்ளவிரும்புபவர்கள் அவரர் மாநில ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மறவாமல் ஆரஞ்சு நிற உடை அணிந்துக் கொண்டு, மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃப் சிறு கொடியையும் உடன்கொண்டு வாருங்கள். சாலை விதிமுறைகளை மீறாமல் கண்ணியமாக நடந்துக் கொள்ளும்படி ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டம் தொடரும்...
ஓலைச்சுவடி"

ராஜபக்சே வருகையை எதிர்த்து நியூயார்க்கில் தமிழர்கள் பேரணி

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த பேரணியை நடத்தியது. இதில், அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
டொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக பேசியும், விமான குண்டு வீச்சு மூலம் 2,25,000க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியும், இனப்படுகொலையை நடத்தி வரும் ராஜபக்சேசவின் கோர முகத்தை ஐ.நா. சபையின் முன்பு தோலுரித் காட்ட இந்தப் பேரணியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் வானொலிகள், டிவிகள் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்தன.கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் உருத்திரகுமாரன், நாதன் ஸ்ரீதரன், உஷா ஸ்ரீகந்தராஜா, வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

போராட்டத்திற்கு நியூயார்க் காவல்துறை முழு ஒத்துழைப்பும் அளித்ததாக ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர். தமிழர்கள் நடத்திய இந்த பிரமாண்டப் பேரணியை படம் பிடிக்க பெரும் திரளான டிவி கேமராமேன்கள், பத்திரிக்கை புகைப்படக்கார்ரகள் குவிந்தனர். பன்னாட்டு செய்தியாளர்களும் செய்தி சேகரித்தனர்.
திபெத்தியர்களும் போராட்டம் ...
தமிழர்கள் போராட்டம் நடத்திய அதே பகுதியில், சீன அரசைக் கண்டித்து திபெத்தியர்களும் பெரும் திரளாக கூடி போராட்டம் நடத்தினர். தமிழர்களின் பேரணிக்கும் இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல ஈரான் அரசுக்கு எதிராக திரண்ட யூதர்களும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.