வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்த அதிபராகிறார் பராக் ஒபாமா.அமெரிக்கத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா முன்னிலையி்ல் உள்ளார்.ஒபாமா 19 மாகாணங்களிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் 15 மாகாணங்களிலும் முன்னிலையில் உள்ளனர். இதன்மூலம் செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவுள்ளது.இந்த வெற்றிகள் மூலம் மொத்தமுள்ள 538 புள்ளிகளில் (Electoral College) ஒபாமா 333 புள்ளிகளையும் மெக்கெய்ன் 145 புள்ளிகளையும் வென்றுள்ளனர்.அதிபராக 270 புள்ளிகள் தான் தேவை என்ற நிலையில் ஒபாமா மாபெரும் வெற்றியை நோக்கி போய்க் கொண்டுள்ளார்.நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் பராக் ஒபாமா 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் நாட்டின் 44வது அதிபராகிறார்.மேலும் அமெரிக்க அதிபராகும் முதல் கருப்பர் இனத் தலைவர் என்ற பெருமையையும் ஒபாமா பெறுகிறார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தினருக்கு ஓட்டுரிமையே 1964ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மோசமான கொள்கைகளே குடியரசு வேட்பாளர் மெக்கெய்னின் படுதோல்விக்கு காரணமாகக் கருதப்படுகிறது.தனது சொந்த ஊரான சிகாகோவில் வாக்களித்த ஒபாமா தனது வெற்றியையும் அங்கேயே கொண்டாடினார். அவரது பேச்சைக் கேட்க காகோவின் கிராண்ட் பார்க் பகுதியில் சுமார் 10 லட்சம் மக்கள் திரண்டு பல மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்களிடையே ஒபாமா உரையாற்றினார்.அதே போல அமெரிக்கா முழுவதுமே ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட ஆங்காங்கே மக்கள் கூடியுள்ளனர்.பல இடங்களில் கருப்பர் இன மக்கள் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியி்ல் கண்ணீர் வடித்தபடி நின்றுள்ளனர்.1960களுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் தான் மிக அதிகபட்சமான வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக