16 ஆகஸ்ட், 2008

நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....


-ரிஷி சேது
உன் கொலுசுகள்
முத்தமிட்டால்
கூடவெட்கப்படுகிறாய்...

மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம்
நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்...

நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை
பொறுக்குகிறாய்
என் மனமெல்லாம் வாசனைகள்

உயிருக்குள் ஊடுருவுகிறது உன்
சிரிப்பொலி-மரணம்வரை பத்திரமாய் வைத்திருப்பேன்

நான் மர நிழலில் ஒதுங்கும்போது
நீ மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருக்கிறாய்
ஓர் மழையிலோ ஓர் வெயிலிலோ மீண்டும் ஒதுங்குவேன்
அப்போது நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....

உலகில் காற்றும் நீரும் தீர்ந்தபின்னும்
உயிர்வாழ்வேன் உன் நினைவுகளை
சுவாசித்தபடி...

கனவுகள் சுகமானவை-வரும்
எல்லா கனவுகளிலும் நீ
பூங்கொத்தோடு என்னைக் கடக்கிறாய்
சிறுகுழந்தையாய் சிரித்திருக்கிறேன்- நான்...
-ரிஷி சேது (rishi_sethu23@rediffmail.com)

14 ஆகஸ்ட், 2008

ஒரு வாழ்க்கை முறை (A LifeStyle)

ஆங்கிலம் வழி தமிழில்: ஆர்.முத்துக்குமார் (A LifeStyle)
(1)
எனது இளமைப் பருவத்தில், நான் ஒரு விவசாயியாகவும், கால் நடை வளர்ப்பவனாகவும் ஆவதற்கு முன்பு, வங்கி ஊழியராக இருந்தேன். இப்படித்தான் இது எல்லாம் நிகழ்ந்தது:
அப்போது எனக்கு 24 வயது. நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை. இப்போதுள்ள அதே, கேன்னிங்கிற்கும் அரவோஸிற்கும் இடையே உள்ள சாந்தா ஃபே அவென்யூவில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பில் இருந்தேன்.
இப்போது, இந்த சிறிய இடத்திலும் கூட விபத்துக்கள் நேரலாம் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகிவிட்டது. என்னுடைய விஷயத்தில் அது ஒரு மிகச்சிறிய விபத்துதான்; வேலைக்குச் செ‌‌ல்வதற்காக கதவை திறக்கும்போது சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டது.
ஸ்க்ரூ ட்ரைவர்கள் மற்றும் குறடு ஆகியவற்றை நாடிய பிறகு பூட்டு ரிப்பேர் செய்யும் கடையை அணுக முடிவு செய்தேன். பூட்டு ரிப்பேர் செய்பவனுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட வேளையில் வங்கிக்கு சற்று தாமதமாக வருவேன் என்று தகவல் அனுப்பினேன்.
அதிர்ஷ்டவசமாக பூட்டு ரிப்பேர்கார‌ர் சொன்ன படி வந்து சேர்ந்தார். இவரைப் பற்றி எனக்கு நினைவு இருப்பதெல்லாம், அவர் இளமையாக இருந்தபோதும் அவர் தலை முடி முழுதும் வெள்ளையாக இருந்தது என்பது மட்டுமே. சாவித் துவாரம் வழியாக அவனிடம் கூறினேன், "சாவி உடைந்து பூட்டிற்குள் உள்ளது" என்று.
அவர் எரிச்சலை துரித கதியில் வெளிப்படுத்தினார். "உள்ள மாட்டிக்கிச்சா? அப்ப இது ஏற்கனவே கஷ்டமான காரியம், இதற்கு எனக்கு 3 மணி நேரம் ஆகும், மேலும் நான் இதற்காக உங்களிடமிருந்து வசூலிக்கும் தொகை....
அவர் ஒரு கட்டுப்படியாகாத கட்டணத்தைக் கூறினார்.
தற்போது வீட்டில் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் கதவு திறந்தவுடன் வெளியே வங்கிக்குச் சென்று உனக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்து விடுகிறேன் என்றேன்.
இதைக் கூறியவுடன், என்னை எரித்து விடுவதுபோல் அவன் பார்த்தது நான் ஏதோ ஒழுக்கமற்ற ஒரு காரியத்தை செய்யச் சொன்னது போல் இருந்தது.
"என்னை மன்னியுங்கள்" அவன் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒரு நாகரீகத்துடன் கூறினான். " அர்ஜென்டீன பூட்டு ரிப்பேர் சங்கத்தில் நான் உறுப்பினர் மட்டுமல்ல, இந்த சங்கத்தின் விதிமுறைகளை உருவாக்கியதில் பங்காற்றியவனும் கூட. இதில் ஊகத்திற்கு எந்த விதமான இடமும் இல்லை. உங்களை உசுப்பிவிடும் அந்த ஆவணத்தை நீங்கள் படிக்க விருப்பம் கொண்டீர்களென்றால், அதில் அடிப்படை கட்டளைகள் என்ற தலைப்பின் கீழ் எந்த ஒரு சங்க உறுப்பினரும் வேலை முடிந்த பிறகு காசு வாங்கக்கூடாது என்ற விதி முறை இருப்பதை அறிவீர்கள்" என்றான்.
நான் நம்பிக்கையற்று லேசாக புன்னகைத்தேன். "நீ விளையாடுகிறாய் என்று நினைக்கிறேன்" என்றேன்.
ஹலோ சார்; அர்ஜென்டீன பூட்டு ரிப்பேர் தொழிலாளர் சங்க விதிகள் ஒன்றும் நகைச்சுவை இல்லை. அந்த விதிமுறைகளில்.. எந்த ஒரு விவரத்தையும் மீற முடியாது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க பல ஆண்டுகள் ஆய்வு தேவைப்பட்டது. ஆனால்... எல்லோரும் அதனை படித்து புரிந்து கொள்ள முடியாது என்பது வேறு விஷயம். ஏனெனில் நாங்கள் ஒரு குறியீட்டு மொழி அல்லது ஒரு குழூ உக்குறி மொழியில் எழுதியுள்ளோம். இருந்தாலும் அதன் அறிமுகத்தில் உள்ள 7-வது ஷரத்து உங்களுக்கு புரியும் என்று கருதுகிறேன், "கடவுள் கதவுகளை திறப்பார், கதவுகள் அதனை போற்றி வணங்கும்".
(2)
அந்த முட்டாள்தனத்தை ஏற்கக் கூடாது என்பதற்கு தயாரானேன். "தயவு செய்து கதவை திறந்து கொடுங்கள், பணத்தை உடனடியாகக் கொடுத்து விடுகிறேன்"
"மன்னிக்கணும் சார், எந்த ஒரு தொழிலுக்கும் தர்மம் ஒன்று உண்டு, பூட்டு ரிப்பேர் தொழிலில் அது வளைந்து கொடுக்காதது, குட் டே சார்". அவன் கிளம்பிப்போனான்.
நான் அதிர்ச்சியில் அப்படியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தேன். பிறகு வங்கியை அழைத்து என்னால் இன்று வர முடியாமல் போகலாம் என்று தகவல் தெரிவித்தேன்.
அதன் பிறகு அந்த வெள்ளைத்தலை பூட்டு ரிப்பேர்காரரை நினைத்துப் பார்த்து எனக்கு நானே கூறிக் கொண்டேன்: "அவன் ஒரு சரியான பைத்தியம்". நான் வேறொரு பூட்டு ரிப்பேர் கடையை அழைக்கப்போகிறேன், பூட்டை திறந்தவுடன் வெளியில் சென்று பணம் தருகிறேன் என்று கூறக்ககூடாது என்று முடிவு செய்தேன்.
தொலைபேசி ஏட்டை எடுத்து எண்ணைக் கண்டுபிடித்து டயல் செய்தேன்.
என்ன முகவரி? ஒரு தற்காப்பான பெண் குரல் கேட்டது.
3653 சான்ட்டா ஃபே, குடியிருப்பு, 10- ஏ.
அவள் சிறிது நேரம் தயங்கினாள், என்னை முகவரியைத் திரும்ப கூற வைத்தாள். பிறகு : "சாத்தியமில்லை சார், அர்ஜென்டீன பூட்டு ரிப்பேர் ஊழியர் சங்க விதிகள் இந்த முகவரியில் எந்த வேலை செய்வதையும் தடை செய்துள்ளது" என்றாள். கோபத்தில் நான் கொதித்தெழுந்தேன் " இப்ப கவனமா கேட்டுக்க, இந்த மாதிரி முட்டா... தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு 20 பூட்டு ரிப்பேர் கடைகளுக்கு தொலைபேசி செய்தேன். முகவரியை கேட்டவுடன் ஒரே மாதிரியான பதில்தான் வந்தது.
அதன் பிறகு 20 பூட்டு ரிப்பேர் கடைகளுக்கு தொலைபேசி செய்தேன். முகவரியை கேட்டவுடன் ஒரே மாதிரியான பதில்தான் வந்தது.
சரி! இதற்கு வேறு எங்காவது தீர்வை கண்டுபிடிக்கிறேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.
நான் குடியிருப்புக் கட்டிடத்தின் பணியாளை அழைத்து பிரச்சனையை விளக்கினேன்.
"இதுல ரெண்டு விஷயம் இருக்கு" என்று அவன் கூறத் தொடங்கினான், "எனக்கு பூட்டுகளை திறக்கத் தெரியாது, இரண்டாவது எனக்கு திறக்கத் தெரிந்தாலும், நான் செய்ய முடியாது, ஏனெனில் என் வேலை இடத்தை சுத்தம் செய்வதும் சந்தேகத்திற்கிடமான பறவைகள் அதன் கூண்டை விட்டு வெளியே பறக்காமல் பார்த்துக் கொள்வதும்தான். மேலும் நீங்கள் காசு கொடுப்பதில் அவ்வளவு பெருந்தன்மையானவரும் இல்லை" என்றான்.
இப்போது நான் பதட்டமடைய துவங்கினேன், நிறைய தர்க்கமற்ற, பயனற்ற செயல்களை செய்தேன். ஒரு கப் காபி குடித்தேன், சிகரெட் புகைத்தேன். உட்கார்ந்தேன், எழுந்தேன், நடந்தேன், கைகளைக் கழுவினேன், ஒரு தம்ளர் தண்ணி குடித்தேன்.
பிறகு எனக்கு மோனிகா டிஷியாவ் தொலை பேசி எண் ஞாபகம் வந்தது. அவள் எண்ணுக்கு ஃபோன் செய்தேன். ஒரு இனிமையையும் அலட்சிய பாவனையையும் குரலில் வரவழைத்துக் கொண்டேன். என்ன எப்டி போயிட்டுருக்கு? எல்லாம் நல்லபடியா நடந்திட்டுருக்கா கண்ணே, என்றேன்.
அவளது பதில் என்னை நடுக்கமுறச் செய்தது."கடைசியா என் ஞாபகம் வந்துருக்கு இல்ல? நீ என்னை காதலிக்கிறாய் என்று என்னால் கூற முடியும். கடந்த இரண்டு வாரங்களாக உன்னை நான் பார்க்க முடியவில்லை".
(3)
பெண்ணுடன் வாதம் செய்வது என் திறமைக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக நான் தற்போது இருக்கும் தாழ்வு மனோ நிலையில். இருந்த போதும் எனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவளுக்கு துரித கதியில் விளக்கினேன். அவள் என்னை புரிந்து கொள்ளவில்லையா, அல்லது நான் கூறுவதை கேட்க மறுக்கிறாளா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஃபோனை வைக்கும் முன் அவள் கூறிய கடைசி வார்த்தை: "நான் யாருடைய கைப்பாவையும் அல்ல"!
இப்போது நான் இரண்டாம் முறையாக பயனற்ற தர்க்கமற்ற சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. பிறகு வங்கியை அழைத்தேன், அதாவது சக ஊழியர் ஒருவர் எனக்காக கதவுகளை திறந்து தருவார் என்று எதிர்பார்த்தேன்.
என்ன துரதிர்ஷ்டம்! அது அறிவுகெட்ட, நான் வெறுக்கும் ஜோக்கரானா என்ஸோ பரேடெஸ்ஸிடம் சென்றது. நான் நீண்ட நேரம் அவனிடம் கூற வேண்டியதாயிற்று.
"ஆகவே... உன்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை? வேலைக்கு வராததற்கான சாக்குகளுக்கு உனக்கு பஞ்சமில்லை" என்று அசட்டுத்தனமாக ஆச்சரியம் கலந்த தொனியில் அவன் பேசினான்.
திடீரென கொலை ஒன்றை செய்வதற்கான மனோ நிலை எழுந்து. ஃபோனை வைத்து விட்டு மீண்டும் வங்கியை அழைத்து மிகேலாஞ்சேலோ லபோர்டாவை கேட்டேன். அவன் கொஞ்சம் சட்டென புரிந்து கொள்வான். நிச்சயமாக அவன் இதற்கு ஒரு தீர்வு காண ஆர்வம் கொண்டுள்ளது போல் தெரிந்தது.
உடைந்தது பூட்டா சாவியா சொல்லு? என்றான்.
"சாவி"
"பூட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு?"
கேள்வியால் ஏற்கனவே சற்று கடுப்பாயிருந்த நான் "சாவி உடைந்து பாதி பூட்டுக்குள் உள்ளது" என்றேன்.
"ஸ்க்ரூடிரைவரை வைத்து அந்த சிறிய துண்டை எடுக்க முயற்சி செய்து பார்த்தாயா?"
"ஆமாம்! ஆனா அது சாத்தியமில்லை"
நல்லது! அப்ப ஒண்ணு செய். பூட்டு ரிப்பேர் செய்வறவன கூப்பிடு"
கூப்டுப்பாத்தாச்சு! நான் எகிறும் எனது கோபத்தை அடக்கியபடி கூறினேன்.

"அவங்களுக்கு பணம் முன் கூட்டியே கொடுக்கணுமாம்"
அப்ப பணத்தை கொடு அவ்வளவுதான?
தபாரு என் கிட்ட பணம் இப்பத்தி‌க்கு இல்ல.
அப்ப உன் பிரச்சனைகளுக்கு என்ன பண்றது சொல்லு?
இதற்கு எனக்கு என்னிடம் விரைவான பதிலில்லை. அவனிடம் பணம் கேட்டிருக்கலாம், ஆனால் அவன் பேசிய விதம் என்னை கேட்க விடவில்லை.
இப்படி அந்த நாள் முடிந்தது.
அடுத்த நாள் சீக்கிரமே எழுந்தேன். மேலும் சில தொலைபேசி அழைப்புகளைச் செய்தேன். ஆனால் தொலைபேசி வேலை செய்யவில்லை. மற்றுமொரு தீர்க்கவியலாத பிரச்சனை: தொலைபேசி இல்லாமல் எப்படி பழுது பார்க்க அழைப்பது?
நான் பலகணிக்கு சென்று சான்டா ஃபே அவென்யூவில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் கூவினேன். தெருச் இரைச்சல் காதை செவிடாக்குவது போல் இருந்தது. 10-வது மாடியிலிருந்து அழைத்தால் யாருக்கு காதில் விழும்? அதிகபட்சம் யாராவது ஒருவர் எப்போதாவது மேலே பார்ப்பார் பிறகு தன் வழியே நடந்து செல்கிறார்.
(4)
அடுத்தபடியாக நான் என் தட்டச்சு எந்திரத்தில் 5 காகிதங்களையும் 4 கார்பன்களையும் சொருகி கீழ் வரும் செய்தியை டைப் செய்தேன்: மேடம் அல்லது சார், எனது சாவி உடைந்து பூட்டிற்குள் சிக்கிக்கொண்டுள்ளது. 2 நாட்களாக நான் வெளியே வர முடியவில்லை. முடிந்தால் ஏதாவது செய்யுங்கள். 3653, சான்டா ஃபே குடியிருப்பு 10 -ஏ.

நான் அந்த 5 காகிதங்களையும் தெருவில் வீசியெறிந்தேன். அந்த உயரத்திலிருந்து செங்குத்தாக போடுவது கடினம். புரியாத போக்குடைய அந்த காற்றில் காகிதங்கள் மிதந்து சென்றன. அது நீண்ட நேரம் காற்றில் படபடத்தது. 3 காகிதங்கள் சாலையில் விழுந்தது. ஆனால் அதுவும் இடையறா வாகனங்களால் நசுக்கப்பட்டு கறுப்பானது. மற்றொன்று கடை ஒன்றின் பந்தல் மேல் விழுந்தது. ஆனால் 5-வது நடைமேடையில் விழுந்தது. உடனடியாக ஒரு மிகச்சிறிய கனவான் எடுத்து படிக்கத் தொடங்கினார். மேலே பார்த்தார். சூரிய ஒளி மறைக்காத வண்ணம் கையை கண்ணுக்கு மேல் வைத்துப் பார்த்தார். நான் அவருக்கு நட்பு முகம் காட்டினேன். அவர் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்து சாக்கடையில் போட்டுவிட்டுச் சென்றார்.

சுருக்கமாகக் கூறினால், தொடர்ந்து சில வாரங்களுக்கு என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன்.
பலகணியிலிருந்து நூற்றுக்கணக்கான காகிதங்களை வீசினேன். அவை ஒன்று படிக்கப்படவில்லை, அல்லது படிக்கப்பட்டது, அல்லது யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு நாள் என் வீட்டுக் கதவினடியில் ஒரு தபால் கவர் இருந்ததைக் கண்டேன். தொலைபேசி இணைப்பு நான் பணம் கட்டாததால் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து எனது எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
முதலில் வீட்டில் இருந்த மளிகைச் சாமான்களை தாறுமாறாக பயன்படுத்தி வந்தேன், ஆனால் குறித்த நேரத்தில் சுதாரித்துக் கொண்டேன். மழை நீரை சேமிக்கத் துவங்கினேன். பூந்தொட்டியிலிருந்து தாவரத்தை பிடுங்கி எறிந்து விட்டு, உருளைக் கிழங்கு மற்றும் சில காய்களை பயிர் செய்தேன். அதனை நேசத்துடனும் வலியுடனும் பாதுகாத்து வளர்த்தேன். ஆனால் எனக்கு பிராணிகளின் புரோட்டீன் சத்து தேவைப்பட்டது. இதனால் பூச்சிகளையும் வளர்க்கத் தொடங்கினேன். சிலந்தி, கொறி விலங்குகளை பிடித்து இனப்பெருக்கம் செய்ய வைத்தேன். சமயத்தில் எப்போதாவது சிட்டுக்குருவி அல்லது புறாவையும் பிடித்தேன்.
வெயில் அதிகம் உள்ள நாட்களில் உருபெருக்கும் கண்ணாடி, காகிதம் கொண்டு நெருப்பு பற்ற வைக்க தெரிந்து கொண்டேன். எரிபொருளுக்காக, எனது புத்தகங்கள், மரச்சாமான்கள் ஆகியவற்றை மெதுவே எரித்தேன். அப்போதுதான் தெரிந்தது வீட்டில் தேவைக்கு அதிகமான பொருட்கள் இருக்கிறதென்று.
சில பொருட்கள் தட்டுப்பாடாக இருந்தாலும் நான் வசதியாகவே இருந்தேன். உதாரணமாக வெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. எனக்கு செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் கிடையாது. தொலைக்காட்சிப் பெட்டியையோ வானொலிப்பெட்டியையோ என்னால் வேலை செய்ய வைக்க முடியாது.
(5)
ப‌லகணியிலிருந்து வெளி உலகைப் பார்த்தேன். சில மாற்றங்களை கவனித்தேன். ஒரு புள்ளியில் தள்ளு வண்டிகள் ஓடுவதை நிறுத்திக் கொண்டன. எவ்வளவு காலம் முன்பு இது நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. காலம் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் நான் இழந்தேன். ஆனால் கண்ணாடி, எனது வழுக்கை, எனது நீள வெண் தாடி, என் முழங்கால்களின் வலி ஆகியவை எனக்கு வயதாகிவிட்டது என்பதை தெரிவித்தது.
பொழுதுபோக்கிற்காக எனது சிந்தனையை அலைய விட்டேன். எனக்கு பயமோ லட்சியமோ கிடையாது.
ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், நான் ஒருவாறு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

12 ஆகஸ்ட், 2008

"என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."

அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் அனிதா பிரதாப்
[செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 04:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார்.
"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை 1984 ஆம் ஆண்டு இந்திய சஞ்சிகை ஒன்றுக்காக முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், இலங்கையில் தனது ஊடகவியல் அனுபவம் தொடர்பில் "இரத்தத்தீவு" என்ற நூலை எழுதியிருந்தார்.இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார்.பேட்டியின் முழுவிவரம் வருமாறு:
இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின் முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன. ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு, மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது. அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான் நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.
"என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."
அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின் உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது, சிறிலங்கா அரசின் "இதயம்" வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும் முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்- மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.
இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?
ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று உள்ளது.ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை 'அடக்கி வாசித்துள்ளார்கள்'.ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தம்மை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் எழுந்துவர தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.விடுதலைப் புலிகள் இயக்கம் மிகச்சிறந்ததொரு கெரில்லா அமைப்பு.ஆனால், நாட்டின் வலிமை குறையும் நேரங்களில், விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக மாறி சமரிட்டார்கள்.இந்த வழியை 1990 களின் ஆரம்பப் பகுதிகளில் முயற்சித்த பிரபாகரன், இதனைத் தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளிடம் உள்ள வளங்களைப் பொறுத்தவரை இது மிகவும் விலை மதிப்பானது என்பதையும் விளங்கிக்கொண்டார்.இராணுவம் எல்லா இடங்களிலும் ஏககாலத்தில் காணப்படும்போது புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக இருந்து, தமது நேரத்தை நடவடிக்கைகளை மீளத்திட்டமிடுவதிலும் தம்மை மீள ஒருங்கமைத்துக்கொள்வதிலும் செலவிடுகின்றார்கள்.இதனை இராணுவ வெற்றியாக அரசு கருதுவது பாரதூரமான பிழையாகும்.வானின் நீலத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் போன்று சுருக்கமாகவும் கூர்மையாகவும் தமது தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள்.ஆகவே, புலிகளை அடிமட்ட நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு பிழையான முடிவுக்கு வருவது சரி என்று எனக்குப்படவில்லை.விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தற்போதைய போரில் சிறிலங்கா அரசு தனது இலக்கை அடைந்துவிட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?அரசாங்கம் என்பது போர் தொடர்பாகவே சிந்திக்கக்கூடாது. போரை நான் வெறுக்கின்றேன். போருக்கு ஆதரவளிக்க என்னால் முடியாது. தனது நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துவது தொடர்பாக எந்த ஒரு அரசும் சிந்திக்கவே கூடாது.ஆனால், இலங்கையில் அது நடைபெறுகின்றது. அரசு, தனது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தனது சொந்த மக்களுக்கு எதிரான- கீழ்த்தரமான- ஒரு போரை நடத்திவருகின்றது.
"இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்."
நான் அரசாங்கத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், போரை நடத்துவதற்கான கட்டாய நிலைக்கு நான் தள்ளப்பட்டால், அமைதியை கொண்டுவருவதற்கான பேச்சுக்களுக்கு ஒரு கருவியாகவே போரை- கடைசி தெரிவாக- பயன்படுத்தியிருப்பேன்.அமைதியும் சுபீட்சமும்தான் எந்த அரசினதும் இலக்காக இருக்கமுடியும். போர் என்பதன் அர்த்தம் முடிவு. போர் எனப்படுவது ஒரு நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் உறுதி நிலைக்குமான முடிவாகவே இருக்கமுடியும்.இலங்கையைப் பொறுத்தவரை போர்தான் போருக்கு முடிவாக இருக்கமுடியும் போல தெரிகின்றது. பல தனிநபர்களினதும் குழுக்களினதும் விருப்பத்துக்கு அமையவே போர் தொடரப்படுகின்றது.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உடனடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் சாத்தியங்கள் உள்ளனவா?
நிச்சயமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் அல்ல. தமது அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கும் தலைவர்களைக்கொண்ட இரண்டு நாடுகள் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை பலர் உணரவில்லை. ஆம். இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவை.இந்த ஆண்டுடன் அமெரிக்காவில் புஷ் பதவி இழக்கின்றார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுடன் புதிய அரசியல் முன்னணி ஆட்சிக்கு வரவுள்ளது.ஆகவே, இன்னும் ஒரு வருடத்துக்குள் சிறிலங்காவில் அமைதிப்பேச்சு எதுவும் நடைபெறப்போவதில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிடமான காலப்பகுதி.சிறிலங்கா அரசு, வேகமாகவும் உக்கிரமாகவும் போரில் இறங்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். முக்கியமாக, வரப்போகும் மழை காலத்துக்குப் பின்னர் போரை மேலும் தீவிரப்படுத்தும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்திய அமைதிப்படை விவகாரத்துக்குப் பின்னர் இலங்கையில் நேரடியான இராணுவத் தலையீட்டை மேற்கொள்ள இந்தியா தீவிரமாக இல்லை.ஆனால், பிராந்தியம், பாதுகாப்பு, உபகண்ட உறுதிநிலை ஆகியவை தொடர்பிலேயே இந்தியா, இலங்கை விவகாரத்தில் மிகவும் தீவிரமாகவுள்ளது.ஆனால், இலங்கையில் அமைதிப்பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்குமளவுக்கு இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு விருப்பமோ நேரமோ இல்லை.அதற்காக, இந்தியா முற்றுமுழுதாக இலங்கை விவகாரத்திலிருந்து விலகி விட்டதாக அது அர்த்தமாகிவிடாது. இலங்கையை முழுமையாக போர் சூழ்ந்தநிலை இருக்கக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கின்றது. அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்மட்டக்குழுவினரின் திடீர்ப் பயணம், அதன்பின்னர் வெளியான இந்தியாவின் இராணுவ உதவி குறித்தான செய்தி ஆகியவை தொடர்பான உங்கள் கருத்து என்ன?நான் மேற்கூறிய காரணங்களே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். உயர்மட்டக்குழுவினரின் இந்த வருகை வழமையாக நடைபெறுகின்றதொரு பயணமோ அல்லது பொதுமக்கள் தொடர்பான பயணமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இந்திய அரசானது அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கி, தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை இழந்து செல்லவேண்டிய நிலையில் தேர்தலை எதிர்நோக்கி வங்குரோத்தான நிலையில் உள்ளது என்ற கணிப்பீடு சிங்கள அதிகாரப்பீடத்தின் மத்தியில் உள்ளது என்பது இந்திய அரசுக்கு தெரியும்.இந்தியாவின் இந்த நிலை சிங்கள ஆட்சிப்பீடத்தின் ஒரு பகுதியினருக்கும் பல 'கண்டுபிடிப்புக்களுக்கு' வித்திட்டிருக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்களுக்கு எதிரான- கடுமையான- தனது எச்சரிக்கையை விடுப்பதற்கே இந்திய உயர்மட்டக்குழு அண்மையில் கொழும்புக்கு சென்றிருந்தது.விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.வெகுதூரத்திலுள்ள அமைதி உடன்பாட்டால் இலங்கையில் அமைதிக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில், வரையறைக்குட்பட்ட வன்முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசும் புலிகளும் சமபலத்தை பேணிக்கொள்ளட்டும். நிலைமை கைமீறிப்போகுமளவுக்கு பாரிய போர் ஏற்பட்டுவிடக்கூடாது.இதுவே இந்தியாவின் பாதுகாப்புத்தரப்பினதும் வெளிவிவகாரத் தரப்பினதும் இலங்கை தொடர்பான பார்வையும் எதிர்பார்ப்பும் ஆகும்.
"பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்."
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான மேற்கு நாடுகளின் பார்வையில் கொள்கை மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா?
கனடாவிலும் இத்தாலியிலும் அண்மையில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?
புஷ் ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரினால், சுதந்திரத்துக்காகப் போராடும் அமைப்புக்கள் உட்பட அனைத்து குழுக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்ற பெயருக்குள் அடக்கப்பட்ட மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்குமானால், நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பயங்கரமான தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பார். அதேவேளை, மண்டேலா அண்மையில்தான் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும் விடுதலை அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நோர்வேயின் பிரதி அமைச்சரும் இலங்கையின் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான விதார் ஹெல்கிசன் இது தொடர்பில் அருமையான ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.ஆகவே, உலகின் பார்வையில் விடுதலை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக காணப்படுகின்றன. அந்தவகையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக சித்தரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் அமைதிப்பேச்சுக்களை நடத்த மறுத்து பல நாடுகள் கதவடைத்துள்ளன. இந்த நடவடிக்கை விடுதலை அமைப்புக்களை அழித்தொழிக்க முயற்சித்துவரும் அரசுகளின் கைதுகளை பலப்படுத்தியுள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?தமிழ்மக்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து பக்கபலமாக உள்ளார்கள்.பயங்கரவாதம் தொடர்பில் பேசும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும் பயங்கரவாதத்துக்கு இதுவரை காலமும் ஒரு வரைவிலக்கணம் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? அந்தச் சொல்லை விளக்குவதில் அப்படி என்ன கஷ்டம் இருக்கின்றது?அப்பாவி மக்களை காயப்படுத்துவதோ கொலை செய்வதோ அல்லது அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவிப்பதோ அவை தொடர்பான எதுவும் பயங்கரவாதமே ஆகும். அப்படியானால், எல்லா நாடுகளும் சேர்ந்து ஏன் இதனை வரைவிலக்கணமாக கொள்ளக்கூடாது.ஏனெனில், சுருக்கமாக- தெளிவாக- அர்த்தமளிக்கும் இந்த வரைவிலக்கணம் பல நாடுகளுக்கு பயங்கரவாதம் தொடர்பான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.
"விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை."
பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், சிறிலங்கா, எகிப்து எனப் பல நாடுகள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிவரும். இவை அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாககவே தமது தந்திரோபாயமாக பயன்படுத்தி வருகின்றன.ஆனால், இதில் எத்தனையோ இரட்டை வேடங்கள். வானூர்தியில் குண்டுவைத்ததற்காக லிபியாவின் கடாபியை தனது காலடிக்கு கொண்டுவந்துள்ள அமெரிக்கா, முன்னர் ஈரான் வானூர்திக்கு குண்டுவைத்த தனது குற்றத்துக்கு என்ன தண்டனை வைத்திருக்கின்றது?பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம். கொள்கையற்ற உலக அரசியல் தர்மத்தின் கீழ் அமைப்புக்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படும். பின்னர், அதே தர்மத்தின் கீழ் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படாவிட்டாலும்கூட, பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா போன்ற அரசுகளே அந்த அமைப்புக்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தும். ஆயுதங்கள் வழங்கும். நிதியுதவி செய்யும்.ஈரானின் அகமட்நிஜாட் அரசை கவிழ்ப்பதற்கு 400 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ள அமெரிக்கா, தான் பயங்கரவாத அமைப்புக்களாக தடைசெய்துள்ள ஈரானிய அமைப்புக்களையே தனது இந்த திட்டத்துக்கு பயன்படுத்துவதாக நியூயோர்க்கர் பத்திரிகையில் சைமர் ஹேர்ஷ் என்பவர் அண்மையில் எழுதியுள்ளார். அமெரிக்கா கடந்த காலத்தைப் போலவே தற்போதும் ஈரானிய பயங்கரவாத அமைப்புக்களுடன்- மும்முரமாக- இணைந்து செயற்பட்டு வருகின்றது.கொள்கைகளை அரசியல் வென்று வருகின்றது.
இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா காண்பிக்கும் போக்கில் தமிழ்நாட்டு அரசு செலுத்தும் செல்வாக்கு என்ன என்று கருதுகின்றீர்கள்?
தமிழ்நாட்டு நிலைமை 80 களில் காணப்பட்டது போன்று இப்போது இல்லை. இந்தியாவும் தமிழ்நாடும் அந்த நிலைமையிலிருந்து மாறியுள்ளன. வன்முறை குழிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் துன்பப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு, காலநீட்சியால் இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று நிலையிலேயே இன்று ஒவ்வொரு சராசரி இந்தியக் குடிமகனும் உள்ளான். இந்தியாவிலோ நேபாளத்திலோ ஏன் இந்தியாவின் பின்தங்கிய இடங்களில்கூட என்ன நடைபெறுகின்றது என்பதை அறிவதில் அவர்களுக்கு பெரிய ஆர்வமொன்றும் இல்லை.இந்தியாவின் சராசரி குடிமகன் ஒருவர் இலங்கை விடயத்தில் காண்பிக்கும் ஆர்வத்திலும் பார்க்க, மன்மோகன் சிங் அதிகம் ஆர்வம் காண்பிக்கின்றார் என்று நான் கூறுவேன்.அதற்கு ஊடகங்களும்தான் காரணம். ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போலவே இந்தியாவிலும் ஊடகங்கள், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஊடகங்கள் அற்ப விடயங்களான துடுப்பாட்டம், திரைப்படம், நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை போன்றவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.உண்மையான, முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு இந்திய ஊடகங்கள் அளிக்கும் முன்னுரிமைக்கும் அவற்றுக்கு உண்மையில் எவ்வாறான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைமைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது.ஊடகங்களைப் பொறுத்தவரை அவை தனது பயனாளர்களை திருப்திபடுத்துகின்றனவே தவிர சராசரி குடிமகனை அல்ல.
இலங்கை மற்றும் அனைத்துலக நிலைமை குறித்த விடுதலைப் புலிகளின் சிந்தனை, பார்வை தற்போது என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
உங்களுக்கே தெரியும் விடுதலைப் புலிகளின் சிந்தனை என்று ஒன்றும் இல்லை. பிரபாகரனின் சிந்தனை மட்டும் தான். அதுவே விடுதலைப் புலிகளின் சிந்தனை.இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.பிரபாகரன் திறமையான இராணுவ திட்டவகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றிய ஆழமான அறிவு உடையவர். முக்கியமாக, மாறுகின்ற அனைத்துலகத்தின் போக்கு தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாக பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வது தொடர்பில் பிரபாகரனுக்கு தீர்க்கமான ஞானம் உண்டு.இதனை நாம் முன்னரும் கூறியுள்ளேன். எண்பதுகளில் விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இந்தியாவின் உயர் உதவிகளைப் பெற்றுவந்தன."இப்போது நாம் இந்தியாவின் உதவியைப் பெற்றுவந்தாலும் இதே இந்தியாவை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு காலம் எமக்கு வரும்" - என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார்.இந்தப் பதிலால் திகைத்துப்போன நான் "ஏன்" என்று அவரிடம் கேட்டபோது -"சுதந்திர தமிழீழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி அமைந்தால், அது இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் பிரிந்து செல்வதை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு." என்றார்.அமெரிக்காவின் மனநிலை குறித்தும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.பல நாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கையிலும் அதனைத்தான் செய்கின்றது.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பெரும் அழிவுடன் கூடிய பாரிய போரை உலகளாவிய ரீதியில் புஷ் அரசு ஆரம்பித்திருந்தது. புஷ்ஷினது இந்தப் போர் உள்ளவரை தனது இலக்கை நோக்கிய பாதையில் எதையும் அடையமுடியாது என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டார்.புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.உலகளாவிய ரீதியில்- கடந்த எட்டு வருடங்களில்- அமெரிக்கா பலமிழந்துள்ளதையும் அதன் பிரபலம் அற்றுப்போயுள்ள நிலைமையையும் நாம் தெளிவாக பார்க்கின்றோம். ஆதிக்க நிலையிலிருந்த அமெரிக்க வல்லரசின் போக்கு இனிவரும் ஆண்டுகளில் பலமிழந்து காணப்படும்.வர்த்தக நெருக்கடிகள், ஆப்கானிலும் ஈராக்கிலும் மேற்கொண்ட குழப்பான போர் நடவடிக்கை, மனதளவில் சோர்ந்துபோயுள்ள நாட்டுமக்கள் போன்ற விடயங்களினால் அமெரிக்கா பெரிய சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. அத்துடன், மீண்டும் எழுச்சி கொள்ளும் ரஷ்யா, புத்தெழுச்சி கொள்ளும் சீனா, இந்தியா, பிறேசில் ஆகியவையும் அமெரிக்காவுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன.21 ஆம் நூற்றாண்டில் வித்தியாசமான உலகத்தை பார்க்கப்போகின்றோம் என்பதையே இவை கோடி காட்டுகின்றன.இந்த உலக அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுதான் பிரபாகரன் தனது நகர்வினை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பான செய்திகளை தவிர்க்கம் மேற்குலக ஊடகங்கள் குறித்து அவற்றுடன் இணைந்து பல காலம் பணியாற்றி வருபவர் என்ற ரீதியில்- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?மேற்குலக ஊடகங்கள்- முக்கியமாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா- தமது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக கருதும் செய்திகளையே கவனத்தில் கொள்கின்றன. அதுதான், அவர்கள் ஆப்கான் மற்றும் ஈராக் குறித்த செய்திகளை கவனிக்கின்றார்கள்.இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினை என்பது மேற்குலக ஊடகங்கள் சார்ந்த அரசுகளுக்கு முக்கியமான விடயம் அல்ல.அங்குள்ள ஊடகங்கள் அரச அமைப்பின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, அதில் அவர்கள் பிழை விடமாட்டார்கள். அதற்காக அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறமாட்டேன். ஏனைய நாடுகளை விட அங்கு அதிக ஊடக சுதந்திரம் உள்ளது.
"பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம்."
ஆகவே, வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இராணுவ- அரசியல் விவகாரங்கள் என்று வரும்போது அந்த நாட்டு அரசுகளுடன் இந்த ஊடகங்கள் மிக நெருக்கமாகவே செயற்படுகின்றன.அந்த நாட்டு அரசுகளும் தமது போர் மற்றும் வெளிவிவகார இலக்குகளை அடைவதற்கு இந்த ஊடகங்களை மறைமுகமான கருவியாக பயன்படுத்திக்கொள்கின்றன.ஈராக் போரின் ஆரம்பத்தில் அதனை மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது இதற்கு நல்ல உதாரணம். புஷ்ஷினது பிரசாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு வாந்தி எடுத்தது போலவே அப்போது மேற்குலக ஊடகங்கள் செயற்பட்டன.இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து ஊடகவியலாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?வளர்ச்சியடைந்த சமூகங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமை காக்கவே கூடாது. நாட்டின் குடிமக்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.அத்துடன் பாதிக்கப்பட்ட இந்த ஊடக அமைப்புக்கள், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் எல்லைகள் தாண்டிய ஊடக இயக்கம் மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான், இந்த அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கமுடியும்.ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் அடிப்படை கடமை.அதேவேளை, அரசியலில் தலையிடாமல் தனது பணியைச் செய்வது ஊடகவியலாளரின் அடிப்படைக் கடமை. இப்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் கட்சிகளின் பேச்சாளர்களாக செயற்படும் நிலைமை அதிகரித்துவிட்டது. கட்சி அங்கத்தவராக இருந்துகொண்டு தான் செய்யவந்த பணியைச் செவ்வனே செய்யமுடியாது. இப்படியான ஊடகவியலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும்- பொய்களையும்- அவிழ்த்து விடுகின்றனர். கட்சி சாராமல் உண்மையாக, நேர்மையாக செயற்படுவது ஊடகவியலாளனின் அடிப்படை கடமை.
நீங்கள் மீண்டும் இலங்கை செல்லவுள்ளீர்களா? இல்லை என்றால் ஏன்?இல்லை. நான் அங்கு செல்வதாக இல்லை. நான் உங்களுக்கு முன்னர் கூறியது போன்று ஊடகங்களுக்கு இலங்கையில் நாட்டம் இல்லை.ஆனால், என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.எனது வாழ்க்கையில் நிறைவேறாமல் உள்ள சில கனவுகளில் அதுவும் ஒன்று.எமது காலப்பகுதியில் உள்ளதொரு மிக முக்கியமான கெரில்லாத் தலைவர் பிரபாகரன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.அவரது மனதை எந்த எழுத்தாளரையும்- ஊடகவியலாளரையும்- விட நான் அதிகம் புரிந்துகொள்வேன் என நினைக்கிறேன்.பிரபாகரனின் வாழ்கை வரலாறை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் முழு உலகமும் ஆழமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அவர்களை ஈர்க்கும் வகையிலும் நான் எழுதுவேன்.
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று..
ஒலிம்பிக்-பதக்கப் பட்டியல்

கனவு

-ஹரன் பிரசன்னா
நீண்ட நாளுக்குப் பின் தோட்டம்
மீண்டும் கனவில் வந்தது
தானாகவே முளைத்திருந்த
பப்பாளி மரங்களின் கிளைகளில்
வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது
காகத்தின் எச்சம்
சிறுவர்கள் எறிந்த பந்து
கண்டெடுக்கப்படாமல் அலைந்து
நிலைத்திருக்கவேண்டும், அதன்
உடலெங்கும் மண்ணாக
கரிய சுவரில்
நிழலில்லா கரும்பூனை
தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க
மண்வாசனையுடன் லேசான தூரலென
திசை மறக்கத் தொடங்கினேன்
கனவு கலையும் நேரம்
கை பிரிந்து செல்லும்
காற்றைப் பற்றிக் கவலையில்லை
எங்கேனும் சுற்றித் திரிந்து
மீண்டு ஏகும்
எனக்கான கனவைப் போல
எனக்கான காற்றும்

6 ஆகஸ்ட், 2008

உலக அளவில் தமிழ் பரப்பிய அகத்தியலிங்கனார்

மு.இளங்கோவன்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் (79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற கார் விபத்தில் நேற்று (4ம் தேதி) இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாளும் (78), ஓட்டுநர் சீவபாலனும் (28) ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர்.
முனைவர் ச.அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு:
ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை-அருணாசல வடிவு. நாகர்கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது. இம் மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ் கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத் திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக இருந்தது.அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை ஆராயவுமான சூழலை உருவாக்கியவர்.அமெரிக்காவில் பணிபுரிந்த பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் தமிழின் சிறப்புப் பற்றிய நூல்கள் எழுதக் காரணமாக இருந்தவர். அறிஞர் கார்ட்டு, பாண்டே, தாமஸ் டிரவுட்மண்டு உள்ளிட்டவர்களுக்கு நெருக்கமாக இருந்து தமிழ் பயிற்றுவித்தவர். அவர்களால் மதிக்கப் பெற்றவர். தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, மொழியியல்துறை சார்ந்த பேராசிரியர்கள் பலருக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தி முனைவர் பட்டம் பெறக் காரணமாக இருந்தவர்.தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் பலரும் ச.அகத்தியலிங்கனாரின் மாணவர்களாக விளங்கியவர்களே.பொற்கோ, கி.அரங்கன், கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம் அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.1968 முதல்1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகை தரு பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன.இவர்தம் தமிழ்,ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இலத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய ச.அகத்தியலிங்கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல் துறையினரும் கலங்கி நிற்கின்றனர்.மறைந்த துணைவேந்தரின் மகள் சண்முகசுந்தரி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சிஅலுவலகத்தில் பணிபுரிகிறார். இன்னொரு மகள் அருணாசலவடிவு சென்னைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகிறார்.முதல்வர் இரங்கல்:அகத்திலிங்கத்தின் மறைவுக்கு முதல்வர் கருணநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன்னுடன் அவர் பங்கேற்றத்தை நினைவுகூர்ந்துள்ள கருணாநிதி, தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள மகத்தானவை. அவரது மறைவு தமிழுலகுக்கு பெரும் இழப்பு என்று கூறியுள்ளார்.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.-மு.இளங்கோவன் (muelangovan@gmail.com)
http://thatstamil.oneindia.in

5 ஆகஸ்ட், 2008

போய்வா, இனி நாம்...

ரிஷி சேதுநீ வைத்துவிட்டுப்போனசிறு குறிப்பைத்தாங்கி நிற்கும்கதவின் கைப்பிடிகள்-வசப்படாத சந்தோஷம்-உன்வாசனைகளையும் விட்டுப்போயிருந்தாய்நீ விட்டுப்போன கூந்தல்மலர் வாடிப்போனாலும்வாசித்தது உன் வாசனையைத் தாங்கிஓர் வரியில் முடிந்திருந்தாய் ''போகிறேன்'' என்றுஓராயிரம் முள்குத்திய வலிபோய்வா இனி நாம்பிரிவுகளை பகிர்ந்துகொள்வோம்
உண்மையே கோவில்
உண்மையாணவர்களே தெய்வம்

தொடர்ச்சியாக மாறும் பல செய்தி ஆதாரங்களை தேடி உலாவவும்

http://news.google.co.in/news?ned=ta_in&topic=tn

4 ஆகஸ்ட், 2008

http://www.dravidar.org/

தட்டப்://வ்வ்வ்.திராவிடர்.ஒர்க்/
http://www.dravidar.org/

நீங்கள் சிறந்த நண்பரா...? இங்கே சோதித்துக் கொள்வீர்!

சிராவண‌ன்
தோழன்/தோழி... ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாதவன்/முடியாதவள். வாழ்க்கை முழுமையடைய இன்றிமையாததே தோழமை. ஒவ்வொரு உறவுக்கும் உரிய வரையறை வகுத்து, ‘எப்படியேனும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும்’ என வழிகாட்டியுள்ளனர், நம்முடைய சான்றோர்கள்.அந்த வகையில், நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்களா? நல்ல நண்பராக இருக்க வேண்டிய வரையறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்தது வருகிறீர்களா? தன்னைத் தானே சோதித்து அறிந்துகொள்ள இதோ ௰ கேள்விகள்... அவற்றுக்கு பதிலளித்த பின், உங்களது நட்பின் தரத்தை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம். முத‌லி‌ல் ஒரு கா‌‌கித‌ம் ம‌ற்று‌ம் பேனாவை எடு‌த்து‌க் கொ‌ண்டு உ‌ங்களது கே‌ள்‌வி எ‌ண்ணையு‌ம், ப‌திலு‌க்கான எழு‌த்தையு‌ம் வ‌ரிசையாக கு‌றி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌பி‌ன்ன‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌க் கூடாது.துவங்குவோமா..?௧) உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன? அ) நண்பர் ஆ) பணம் இ) பூவா, தலையா போட்டு தேர்வு செய்வேன்.௨) ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது? அ) தருணம் வரும்போது மட்டுமே முயற்சி செய்வேன். ஆ) எப்போதும் முயற்சி செய்வேன் இ) நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுவேன். ௩) நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...? அ) கண்டுகொள்ளவே மாட்டேன் ஆ) என்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவார் என்பதால், தவறை எடுத்துரைக்க மாட்டேன் இ) நண்பர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, தவறை உணர்த்துவேன்.௪) நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது? அ) கருத்து ஒற்றுமை ஆ) தேக ஒற்றுமையும், பழக்கவழக்கமும் இ) ஏதுமில்லை.௫) நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?அ) நண்பரின் முகத்தில் புன்னகைப் பூக்கும்படியான செயல்கள் ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள் இ) இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது.
6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது... அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன் ஆ) நட்புக்கு தற்காலிக ஓய்வு தருவேன் இ) நம்மால் ஆபத்தை நீக்க முடியுமா? என யோசிப்பேன். 7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...அ) இன்பம் மட்டுமே ஆ) இன்பமும் துன்பமும் இ) களிப்பினை மட்டுமே. 8) நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்... அ) உள்ளே பொறாமை இருக்கும், ஆயினும் புகழ்ந்து பேசுவேன்ஆ) பொறாமையின்றி வாயாறப் புகழ்வேன் இ) புகழ்வதோடு, அந்தத் திறமை மென்மேலும் வளர்வதற்கு உதவுவேன்; ஊக்கப்படுத்துவேன். 9) உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...அ) தயங்காமல் ஏற்றுக்கொள்வேன் ஆ) எனக்கு விருப்பமில்லை என்று நிதானமாக புரியவைப்பேன் இ) உரிமையோடு பகிரங்கமாக மறுத்துவிடுவேன். 10) உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..? அ) நட்பை முறித்துக் கொள்வேன் ஆ) அன்பு மாறாமல் நட்பைத் தொடர்வேன் இ) பழிவாங்குவேன்.
உங்களது 10 விடைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? இதோ முடிவுகள்... நீங்கள் தேர்வு செய்தவை 1-அ, 2-ஆ, 3-இ, 4-அ, 5-ஆ, 6-அ, 7-ஆ, 8-இ, 9-அ, 10-ஆ எனில்... உங்கள் பெயரை அகராதியில் தேடுங்கள். அங்கே உங்களது பெயரின் அர்த்தம் ‘நட்பு’ என்றிருக்கும். ஆம், நீங்கள் சிறந்த நண்பர் மட்டுமல்லர்; நட்பின் இலக்கணமும் கூட! நீங்கள் தேர்வு செய்தவை 1-ஆ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-அ, 6-இ, 7-அ, 8-ஆ, 9-ஆ, 10-அ எனில்... உங்களால் சிறந்த நண்பராக முடியும். ஆனால், சூழ்நிலையில் கைதியாகிவிடுகிறீர்கள். உங்களது நட்பால், எவருக்கும் பாதகம் இல்லை. எனினும் முயன்றால், நீங்கள் எளிதில் சிறந்த சிநேகிதராகலாம்.நீங்கள் தேர்வு செய்தவை 1-இ, 2-இ, 3-அ, 4-ஆ, 5-இ, 6-ஆ, 7-இ, 8-அ, 9-இ, 10-இ எனில்... மன்னிக்கவும். உங்களுக்கு நண்பராகும் தகுதி, அறவே இல்லை. தயவு செய்து உங்கள் எண்ணப் போக்கை மாற்றிக்கொண்டு, நண்பர்கள் பலரைப் பெற, ‘நட்பு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி : திருவள்ளுவருக்கு! ஆம், தெய்வப் புலவரின் 79, 80, 81-வது அதிகாரங்கள் முறையே ‘நட்பு’, ‘நட்பாராய்தல்’ மற்றும் ‘பழைமை’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் தயாரிக்கப்பட்டன
ராஜாஜியின் சினேகிதன்:பெரியார் ஒரு நட்புக்கடல். அவரது பிராமண நண்பர்களில் மிக முக்கியமானவர் மூதறிஞர் ராஜாஜி. தனிப்பட்ட முறையில் பிறரது மனம் புண்படும் அளவுக்கு எதுவும் பேசிவிடக்கூடாது, எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் பெரியார். அதனால்தான், கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, நட்பு ரீதியாக அவருடன் கடைசி காலம் வரை இணைந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ராஜாஜி.பெரியார் மிக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரம்; இயற்கை எய்தினார் ராஜாஜி. தனது நண்பனின் மறைவை எண்ணி, சிறு பிள்ளை போல் தேம்பி, தேம்பி அழுதார் பெரியார். எந்த ஒரு துயரத்திலும் அவர் அப்படி அழுது, எவரும் பார்த்தது இல்லை. ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் வந்திருந்தார். எக்கச்சக்கமான பிரமுகர்கள் அமர்ந்திருந்த நிலையில், தள்ளாத வயது; நிற்கக்கூட காலில் வலு இல்லாத நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்தார் பெரியார். அப்போது, அங்கு வந்த குடியரசுத் தலைவர் கிரிக்கு இருக்கை இல்லை. இதை கவனித்த பெரியார், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது சக்கர நாற்காலியில் உட்காரும்படி கிரியை வேண்டினார். எனது நண்பருக்கு மரியாதை செலுத்த வந்தவர் நிற்பதா என்று பெரியார் தனது இருக்கையை அளித்தது கண்டு கிரி ரொம்பவே அதிசயித்துப் போனார். இதன் மூலம் தான் நட்புக்கடல் மட்டுமல்ல; பண்பாட்டுக் காவலரும் கூட என்பதை பெரியார் நிரூபித்தார். திரு.வி.க.வின் நண்பன்:பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார். ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க.. இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார். இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க. அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.
பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்துப் போன திருவிக அப்படியே ஆர தழுவிக்கொண்டாராம். பெரியாரின் நட்புள்ளத்துக்கு மற்றொரு உதாரணம் இதோ.திரு.வி.க. காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ஆனாலும், தொழிலாளர்களின் தோழராகவும், பொதுத்தொண்டுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவருமான திரு.வி.க மறைவுக்கு மிக குறைந்தளவு கூட்டமே வந்திருப்பது கண்டு வேதனை அடைந்தார். உடனடியாக தனது திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும்படி தகவல் அனுப்பினார். அவ்வளவுதான் சில மணி நேரத்தில் அந்த பகுதியே கூட்ட நெரிசலில் திணற ஆரம்பித்தது. அதோடு, திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.அன்புள்ள அண்ணா: பேரறிஞர் அண்ணா, சுமார் 40 ஆண்டு காலம் பெரியாருடன் பழகியவர். பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்து பின்பு, திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட மணியம்மை என்ற பெண்மணியை 1949ம் ஆண்டு மணந்து கொண்டார் பெரியார். அப்போது பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26 மட்டுமே. பெண் உரிமை, பெண் விடுதலை என்று பேசும் பெரியார் தள்ளாத வயதில் ஒரு இளம்பெண்ணை மணம் முடித்தது கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவும் விலகிச் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார். தற்போதைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் அண்ணாவுடன் சென்றனர். திராவிடர் கழகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவே பெரியார் திருமணம் செய்துகொண்டார் என்பது புரியாமல் பிரிந்து சென்றவர்கள் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், காலங்கள் பல சென்ற பின்னரும் அண்ணா-பெரியார் நட்பு, கலைஞர்-பெரியார் நட்பு முறியவே இல்லை. முன்பை விட நெருக்கமான நட்பாகவே அது வலுவடைந்தது. கடந்த 1967ல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, முதல்வராக இருந்த அண்ணா சொன்னது இது. 'தி.மு.கழகத்தின் ஆட்சியை பெரியாரிடம் காணிக்கையாக அளிக்கிறேன்”.பெரியாருடன் நட்புக் கொண்ட பலர் வரலாற்று நாயகர்களாக இடம் பெற்றது இப்படித்தான். பெரியாரின் நட்பு வட்டத்தில் இடம் பெற்றிருந்த நண்பர்களை பட்டியலிட எத்தனை பக்கங்கள் எழுதினாலும் தீராது. அந்த அளவுக்கு பரந்து விரிந்த மனம் கொண்டிருந்தார் பெரியார். அரசியலாகட்டும்; சமூக சேவையாகட்டும்; கொள்கை முடிவாகட்டும்; இன்றைய காலக்கட்டத்தில் பெரியார் போல் நட்புள்ளம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, சொல்லுங்கள்...?

தந்தை பெரியாரும், அவரது நண்பர்களும்

தந்தை பெரியாரை நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம்...?ஓர் ஜாதி மறுப்பாளராக, சமூகப் போராளியாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, சமூக சீர்திருத்தவாதியாக, இன்றைய அரசியல் கட்சிகளுக்கு அடித்தளம் இட்டவராக.... இப்படி பல்வேறு அவதாரங்கள் பெரியாருக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சங்கள். யாருக்காவும், எதற்காகவும் தனது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாத கொள்கை வீரராக திகழ்ந்ததன் காரணமாகவே பலரது கண்களுக்கும் அவர் ஓர் கலகக்காரராக தெரிந்தார்.ஆனால், தனது கொள்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு தலைவர்களிடமும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஒரு மாபெரும் தலைவர் பெரியார் மட்டுமே.அன்புக்குரிய அய்யங்கார்: பெரியாரின் நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமானவர் ஏ.எஸ்.கே.அய்யங்கார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இவர், சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர். பெரியாருடன் மிக நட்பு வைத்திருந்த இவர், பெரியாரின் எண்ணங்கள், கொள்கைகள், விருப்பங்கள் என அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தார். “பிராமணர்கள் மீது பெரியாருக்கு எந்த வெறுப்போ, கோபமோ கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவரைப் பற்றி தவறாகவே நினைத்து கொண்டிருகிறார்கள். பிராமணீயம் என்ற பெயரில் கடவுள், புராணங்கள், இதிகாசங்களை போற்றும் அந்த கொள்ளையைத்தான் எதிர்த்தார்" என்று தனது நண்பர் பற்றி உலகுக்கு உரக்க சொன்னவர் இவர்தான். அதுதான் உண்மையும் கூட