தந்தை பெரியாரை நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம்...?ஓர் ஜாதி மறுப்பாளராக, சமூகப் போராளியாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, சமூக சீர்திருத்தவாதியாக, இன்றைய அரசியல் கட்சிகளுக்கு அடித்தளம் இட்டவராக.... இப்படி பல்வேறு அவதாரங்கள் பெரியாருக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சங்கள். யாருக்காவும், எதற்காகவும் தனது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாத கொள்கை வீரராக திகழ்ந்ததன் காரணமாகவே பலரது கண்களுக்கும் அவர் ஓர் கலகக்காரராக தெரிந்தார்.ஆனால், தனது கொள்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு தலைவர்களிடமும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஒரு மாபெரும் தலைவர் பெரியார் மட்டுமே.அன்புக்குரிய அய்யங்கார்: பெரியாரின் நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமானவர் ஏ.எஸ்.கே.அய்யங்கார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இவர், சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர். பெரியாருடன் மிக நட்பு வைத்திருந்த இவர், பெரியாரின் எண்ணங்கள், கொள்கைகள், விருப்பங்கள் என அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தார். “பிராமணர்கள் மீது பெரியாருக்கு எந்த வெறுப்போ, கோபமோ கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவரைப் பற்றி தவறாகவே நினைத்து கொண்டிருகிறார்கள். பிராமணீயம் என்ற பெயரில் கடவுள், புராணங்கள், இதிகாசங்களை போற்றும் அந்த கொள்ளையைத்தான் எதிர்த்தார்" என்று தனது நண்பர் பற்றி உலகுக்கு உரக்க சொன்னவர் இவர்தான். அதுதான் உண்மையும் கூட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக