25 செப்டம்பர், 2008

ராஜபக்சே வருகையை எதிர்த்து நியூயார்க்கில் தமிழர்கள் பேரணி

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த பேரணியை நடத்தியது. இதில், அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
டொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக பேசியும், விமான குண்டு வீச்சு மூலம் 2,25,000க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியும், இனப்படுகொலையை நடத்தி வரும் ராஜபக்சேசவின் கோர முகத்தை ஐ.நா. சபையின் முன்பு தோலுரித் காட்ட இந்தப் பேரணியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் வானொலிகள், டிவிகள் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்தன.கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் உருத்திரகுமாரன், நாதன் ஸ்ரீதரன், உஷா ஸ்ரீகந்தராஜா, வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

போராட்டத்திற்கு நியூயார்க் காவல்துறை முழு ஒத்துழைப்பும் அளித்ததாக ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர். தமிழர்கள் நடத்திய இந்த பிரமாண்டப் பேரணியை படம் பிடிக்க பெரும் திரளான டிவி கேமராமேன்கள், பத்திரிக்கை புகைப்படக்கார்ரகள் குவிந்தனர். பன்னாட்டு செய்தியாளர்களும் செய்தி சேகரித்தனர்.
திபெத்தியர்களும் போராட்டம் ...
தமிழர்கள் போராட்டம் நடத்திய அதே பகுதியில், சீன அரசைக் கண்டித்து திபெத்தியர்களும் பெரும் திரளாக கூடி போராட்டம் நடத்தினர். தமிழர்களின் பேரணிக்கும் இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல ஈரான் அரசுக்கு எதிராக திரண்ட யூதர்களும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: