4 ஜூன், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' 3

லங்கையின் பூர்வ குடிகள் யார்?

First Published : 03 Jun 2009 12:52:00 AM IST

Last Updated : 03 Jun 2009 12:47:12 PM IST

மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும்.

மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.

புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?

மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன் யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள் நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன் தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன் மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன். இங்கு கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின் அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு!

தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன் ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின் தலைவர் ஆவார்.

  இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள் அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ் மன்னன் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின் மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக் கூறுகின்றனர்.

இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்? விடை சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன் என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும். அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும் இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன் மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

மேற்கண்ட தகவல்களுக்கு மகாவம்சக் கூற்றே மகா முரணாக இருக்கிறது. அது~  ""இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் 11:19) என்பதாகும்.

இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும் தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின் மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.

சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும் பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும் பொருளாகிறது.

இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும் விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக் கூறுவதன் மூலம் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.

வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம் என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும் குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம் கூறியிருக்க முடியுமா? (1)   இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும். மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில் வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத் தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது. அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.

  1. சிர்கா(Circa-Wintle and Oakley-1972)  குகை ஓவியம்

  2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி                       அகழ்வாய்வுகள் (Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971)

  3. பொன்பரப்பி (Ponbarippu)  குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) .போடியகம்பளை(Podiya Gampala).

இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன. (2)

முதல் பிரிவான சிர்கா மற்றும் குகை ஓவியச் சான்றுகளின்படி அவை சுமார் கி.மு. 4500-க்கு முந்தைய காலத்தைச் சார்ந்தன என அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவைகளின் காலத்தை வரையறுக்கும்போது இச்சான்றுகள் ஸ்ட்ராட்டம்-1 (நற்ழ்ஹற்ன்ம்-1) காலம் என மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கின்றனர்.

மனித சமூகம் காட்டுமிராண்டிக் கால நிலையிலிருந்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, நாகரிகமடைந்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம் செய்யும் தொழிலில் இறங்கியது வரையிலான வளர்ச்சிக் காலத்தை, மானுடவியலாளர் ""ஸ்ட்ராட்டம்'' என்று குறிப்பிட்டு, அதன் வளர்நிலையைக் கணிக்கின்றனர். அதன்படி ""சிர்கா'' பகுதியின் காலம் முதல் பிரிவைச் சார்ந்ததாகிறது. மனித சமூகம் கல் ஆயுதத்தைப் பயன்படுத்திய காலம். இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் மற்றும் அக்கால மனித சமூகம் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன.

அதேபோன்று இரண்டாவது பிரிவான அநுராதபுரத்தின் கிடுக்கிப் பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயுதங்கள், நாணயங்கள், ஓடுகள் ஆகிய சான்றுகளின் மூலம் இவைகளின் காலம் ஸ்ட்ராட்டம் ஐஐ-ன் காலம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த நாணயங்களை மதிப்பீடு செய்த அறிஞர் மறைதிரு டாக்டர் எஸ். தனிநாயகம், ""குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பாவின் காலத்தை ஒட்டிய சிந்துவெளி நாகரிக வரலாற்றைச் சேர்ந்தவை'' என்கின்றார். அவை ஆரியருக்கு முந்தைய திராவிடர் நாகரிகத்தை ஒட்டியதாகும் எனவும் வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

மூன்றாவது பிரிவைச் சார்ந்த பொன்பரப்பி, குருகல்கின்னா, கதிரவெளி, போடிய கம்பளை, யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளின் அகழ்வாய்வுகளில் இரும்பாலான ஆயுதங்களும், அக் காலத்தைச் சேர்ந்த பொருட்களும் கிடைத்தன. இவை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆதித்தநல்லூரில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தும் தமிழ் எழுத்துக்களுடன் காணப்படுகின்றன (படம் காண்க). ஆகையால் அப்பகுதி மக்கள் இரும்புக் காலத்தைச் (Megalithic Age) சேர்ந்தவர்கள் என கணிக்கப்படுகின்றனர்.

இந்தச் சமூக மக்கள் இரும்பைப் பயன்படுத்த தெரிந்துகொண்டு, அலைந்து திரியும் நாடோடிக் கூட்டமாக இல்லாது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்தனர். விவசாயத்தை அறிந்து இருந்தனர். மூன்றாவது பிரிவைச் சார்ந்த அகழ்வாய்வுச் சான்றுகளின்படி இரும்பாயுதக் காலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

இக்காலமே ஸ்ட்ராட்டம்-ஐஐஐஅ ஆகும். இந்த ஆய்வுகளின்படி கிடைத்த தகவல்களிலிருந்து பார்க்கையில் இவை தென்னிந்திய இரும்புக் காலத்தை (கி.மு. 800-100) ஒத்து உள்ளன. மேலும், இப்பகுதி வாழ் மக்கள், குடியிருப்பு விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர் என வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

இப்பகுதி மக்களின் காலமான ஸ்ட்ராட்டம்-ஐஐஐஅக்குப் பின்னரே வட இந்திய மெüரிய சாம்ராஜ்யம் வருகிறது என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். ஆக மேற்கண்ட அகழ்வாய்வுகளின் மூலம் இலங்கை வாழ் பூர்வகுடிகள் அம்மண்ணில் குளங்களின் மூலம் பாசனம் செய்து விவசாயத்தை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. உதாரணமாக அநுராதபுரத்தில் கிடைத்த சான்றின்படி அப்பகுதியில் இருக்கும் குளமானது ஐம்பத்து நான்கு மைல் நீளமான கால்வாயுடன் இணைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சான்றுகளின்படி நான்கு விஷயங்கள் தெளிவாக உணரப்படுகின்றன. அவை:

கருத்துகள் இல்லை: