7 ஜனவரி, 2009


வாழ்த்துக்கள் முருகதாஸ்!!!!!!

இந்தி கஜினி திரைப்படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே ரூ.200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியத் திரைப்படங்களில் இது ஒரு மிகப் பெரிய சாதனை ஆகும்.

சூர்யா நடித்த கஜினி தமிழ் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க ரீமேக் செய்து 24 நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தமிழில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸே இந்தியிலும் இயக்கினார்.
கஜினிக்கு 1250 பிரிண்ட்கள் போடப்பட்டன. ஆனால் படம் வெளியான சில தினங்களில் மேலும் பிரிண்டுகள் கேட்டு விநியோகஸ்தர்கள் நச்சரித்ததால் 150 பிரிண்டுகள் கூடுதலாகப் போடப்பட்டன.
திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே ரூ. 100 கோடி வசூல் செய்த்து கஜினி. இப்போது இரண்டாவது வாரமாக படம் ஓடுகிறது. உலகம் முழுக்க இந்தப் படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக இந்தி திரையுலகினர் கூறுகிறார்கள்.
இப்படத்தில் நடித்ததன் மூலம் அசின் இந்தியின் முதல்நிலை நாயகி ஆகிவிட்டார். இந்த வெற்றி முருகதாஸை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து முருகதாஸ் கூறுகையில்,
தமிழில் பெரிய ஹிட்டான படம்தான் கஜினி. இந்தியிலும் அந்த வெற்றி கிடைத்தாலே போதும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இந்த அளவுக்கு பிரமாண்ட வெற்றியை ஈட்டும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அமீர்கான் என்னிடம் டெலிபோனில் பேசி தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார். டைரக்டர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, ஷங்கர் ஆகியோர் வாழ்த்தினார்கள். டைரக்டர் சேரன் என்னை கட்டிப் பிடித்து தூக்கி கொண்டாடினார். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன்.
கஜினி மூலம் தமிழ் கலைஞர்களுக்கு இந்தி திரையுலகில் மரியாதை ஏற்பட்டு இருப்பதாக பலர் கூறினார்கள். என்னுடன் நிறைய தமிழர்கள் இப்படத்தில் பணியாற்றினர். ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், எடிட்டர் ஆண்டனி ஆகியோர் தமிழர்கள். ஆசின், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் போன்றோரும் தமிழில் இருந்து போனவர்கள் தான்.
இப்படத்துக்கு அமீர்கான் அளித்த ஒத்துழைப்பு அசாத்தியமானது. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். எந்த சீனையும் மாற்றச் சொல்லவில்லை. கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் மாற்றினேன். ஆசினும் சிறப்பாக நடித்தார்.
அடுத்த படமும் இந்தியில்தான் இயக்குகிறேன். ஆமீர்கான்தான் இதிலும் ஹீரோ என்றார் முருகதாஸ்.

கருத்துகள் இல்லை: