- ஓபாமா ஓபாமா என அவரதுபுகழ்பாடிய . உலகம்
இன்டர்நெட் உலகை நேற்று ஓபாமா முற்றிலுமாக ஆக்ரமித்து கொண்டார். இன்டர்நெட் முழுமையும் ஓபாமா, ஓபாமா என அவரது புகழ் பாடின. அவரது பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாக 'பிளாக்குகளில்' ரசிகர்கள் வரிந்து கட்டி கொண்டு எழுதினர்.
அமெரிக்காவின் 44வது அதிபராக ஓபாமா நேற்று பதவியேற்றார். இதை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் இன்டர்நெட்டில் விரும்பி பார்த்தனர். இது குறித்து தங்களது கருத்துக்களை 'பிளாக்குகளில்' உடனுக்குடன் துரிதமாக வெளியிட்டனர்.
ஓபாமா பதவியேற்ற அடுத்த சில வினாடிகளில் வெள்ளை மாளிகை வெப்சைட் 'அமெரிக்காவுக்கு மாற்றம் வந்துள்ளது' என்ற துவக்க வரிகளுடன் செய்தி வெளியிட்டது. அந்த வெப்சைட்டின் முதல் 'பிளாக்கில்' ஓபாமாவின் கொள்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதிலிருந்து ஓபாமா அரசு இன்டர்நெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடு்ப்பது தெளிவாகி உள்ளது. அரசியல் மற்றும் செய்தி வெப்சைட்களை தவிர்த்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வெப்சைட்களும் ஓபாமா பற்றிய செய்திகளையே அதிகம் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் 'பிளாக்கில்', ஓபாமா அதிகாலையில் எழுந்தது, பதவியேற்றது, தனது முதல் உரை நிகழ்த்தியது, புஷ் விடைபெற்றது என அனைத்து விஷயங்களையும் நிமிடத்துக்கு ஒரு முறை என படுவேகமாகவும், சுவாரஸ்யமாகவும் தந்தது.

ஓபாமாவின் பூர்வீக நாடான கென்யாவில் உற்சாகம் கரைபுரண்டதையும் இன்டர்நெட் எடுத்துக் காட்ட தவறவில்லை. நிக் ஓடியானோ என்ற கென்யரின் வீட்டில் உண்ண உணவில்லையாம். ஆனால் அவர் தன்னிடம் ஓபாமா படங்கள் பொறிக்கப்பட்ட சட்டைகள் இரண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு 'பிளாக்' செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஓபாமா தங்களது ரோல்மாடல் என இராக்கியர்களும், ஓபாமா தங்களது வலிகளை புரிந்து கொள்வார் என அரபு நாட்டை சேர்ந்தவர்களும் 'பிளாக்கில்' எழுதியுள்ளனர்.எம்எஸ்என்பிசி இணையதளம் தனது 'பிளாக்கில்' சிறிய குழந்தைகள் முதல் அண்டார்டிக்காவில் வசிக்கும் விஞ்ஞானிகள் என அனைவரும் பதவியேற்பு நிகழ்ச்சியை டிவியில் பார்த்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஜார்ஜ் புஷ், ஒபாமா பதவியேற்புக்குப் பின்னர் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது என்று பாரக் ஒபாமாவிடம் கூறியதாக தி சன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பாரக் ஒபாமா நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் புஷ்ஷிடம் சென்ற ஒபாமா, எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு புஷ், இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறினாராம்.பின்னர் வெள்ளை மாளிகை இல்லத்தை பாரக் ஒபாமாவிடம் முறைப்படி ஒப்படைத்த புஷ், இவை எல்லாம் இனி உங்களுக்குத்தான், குட் லக் என்றாராம்.
அதேபோல, ஒபாமாவின் பேச்சைத் தொடர்ந்து கூடியிருந்த லட்சக்கணக்கானோர் கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் 7வயது குட்டிப் பெண் சாஷா, தந்தையிடம் சென்று, நன்றாகப் பேசினீர்கள், பர்ஃபக்ட் என்று பாராட்டினாராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக